மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

பி.எஸ்.என்.எல்: ரூ. 675க்கு அதிவேக இணையம்!

பி.எஸ்.என்.எல்: ரூ. 675க்கு அதிவேக இணையம்!

அதிவேகமான பிராட்பேண்டு இணையதள சேவையை பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.675க்கு இந்த புதிய சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையில் குறைந்த வேகம் 4 mbps ஆகும். இதன்மூலம் பதிவிறக்க வேகத்தை 250 சதவிகிதம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிகரித்துள்ளது. உதாரணமாக, இதற்குமுன்னர் 20 ஜி.பி. டேட்டா பதிவிறக்கம் ஆகும் நேரத்தில், தற்போது 70 ஜி.பி. டேட்டா பதிவிறக்கம் ஆகிவிடும். மேலும் ரூ.1199க்கு ’காம்போ பிளான் பேக்’ ஒன்றையும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் வேகத்தை 2 mbps-லிருந்து 4 mbps ஆக அதிகரித்துள்ளது. இந்த பிளானில் 1 ஜி.பி. அளவிலான டேட்டாவை பதிவிறக்கம் செய்ய 1 ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 1ஆம் தேதி முதல் இந்த புதிய திட்டங்களை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்களில் குரல் அழைப்புகள் (வாய்ஸ் கால்) முழுவதும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதைப்பற்றிய கூடுதல் தகவல் பெற 1800-345 என்ற இலவச அலைபேசி எண்ணை பி.எஸ்.என்.எல். நிறுவனம் கொடுத்துள்ளது. மேலும் www.chennaibsnl.co.in என்ற இ-மெயில் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம் என்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon