மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

பிக் பாஸ் : தயாராகும் கமல்

பிக் பாஸ் : தயாராகும் கமல்

வட இந்திய சேனல்களில் புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தமிழில் விஜய் டி.வி. தயாரித்து ஒளிபரப்ப இருக்கிறது. வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்காகச் சென்னை அருகேயுள்ள ஈபிவி தீம் பார்க்கில் வீடு ஒன்று தயாராகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 15 விஐபிக்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர்களில் இரண்டு அரசியல்வாதிகள், இரண்டு கிரிக்கெட் பிரபலங்கள் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் பெயர்கள் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் எத்தனை மணி இரவா, பகலா, எதுவும் தெரியாது. சாப்பிடலாம், தூங்கலாம், விளையாடலாம், படிக்கலாம், யார் தாக்குப்பிடித்து 100 நாள் வரை இருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். இந்தியில் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை நடத்தினார். தமிழில் கமல்ஹாசன் நடத்துகிறார். தங்கியிருப்பவர்களைக் கண்காணித்து தீர்ப்பு வழங்குவது அவரது பணி. இந்த நிகழ்ச்சிக்காக கமல் தயாராகி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த நிகழ்ச்சி பற்றி விஜய் டி.வி. என்னிடம் சொன்னதும் எனக்கு காமெடியாகத் தெரிந்தது. என்னுடைய ஒவ்வொரு வினாடியும் மற்றவர்களால் கவனிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு நேர்மாறான ஒரு விஷயத்தைச் சொல்கிறார்களே என்று யோசித்தேன். ஆனாலும் சவாலான விஷயமாக இருப்பதால் ஏற்றுக்கொண்டேன். வீட்டுக்குள் 100 நாள் வசிப்பது யார் யார், என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்க்கப் போகிறேன் என்றார் கமல்.

தமிழ் ரசிகர்களுக்கு எப்போதும் ரியாலிட்டி ஷோக்களை மிகவும் பிடிக்கும். அதிலும் கமல் நடத்தும்போது அதற்கு இன்னும் மதிப்பு அதிகமாகிறது. நிச்சயம் இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரப்போகிறது என்கிறார் விஜய் டி.வி.யின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி. இந்த நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிகள்போல் வெற்றிபெறுமா அல்லது யாருக்கும் தெரியாமல் போகப்போகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon