மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

மிளகாய் : விலையின்றித் தவிக்கும் விவசாயிகள்!

மிளகாய் : விலையின்றித் தவிக்கும் விவசாயிகள்!

இரண்டு வாரங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருந்த தெலங்கானா எனுமமுலா சந்தை, செவ்வாயன்று மீண்டும் திறக்கப்பட்டது. சுமார் 80,000 மிளகாய் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். சந்தை தொடங்கியவுடன் ஒரு குவிண்டால் அளவிலான மிளகாய் ரூ.4,000 முதல் ரூ.4,500 வரையில் விற்பனையானது. பின்னர், விலை படிப்படியாக சரியத் தொடங்கியது. ரூ.1,800 வரையில் விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் கொண்டுவரப்பட்ட 80,000 மூட்டைகளில் வெறும் 5,000 மூட்டைகள் மட்டுமே விற்பனையாயின.

விலை சரிவால் தவித்துவரும் விவசாயிகள் ஏற்கனவே, கடந்த வாரத்தில் கம்மம் மிளகாய் சந்தையில் உரிய நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில், சில விவசாயிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை திரும்பப் பெறுமாறு காங்கிரஸ், தெலுங்கு தேசம், சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் அரசை வலியுறுத்தின. இப்போராட்டத்தில் மிளகாய் விவசாயிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைகோர்த்துள்ளனர்.

சந்தையில் இருப்பு வைப்பதற்கு இடமில்லாத அளவுக்கு மிளகாய் மூட்டைகள் விற்பனையாகாமல் குவிந்து கிடக்கின்றன. அவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்தாலும் அதில் விவசாயிகளுக்கு உகந்த விலை கிடைக்கப்போவதில்லை. இதில் தெலங்கானா அரசும் உரிய தீர்வு வழங்காமல் மவுனம் சாதிப்பதாக விவசாயிகளும் விவசாய சங்கத்தினரும் எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இவ்வாண்டில் அளவுக்கதிகமான அளவில் மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டதாலேயே அவற்றின் விலை வழக்கமான சராசரி விலையைவிட மிகவும் குறைந்துள்ளது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon