மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

'பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் !

'பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் !

இந்திய ராணுவ வீரர்கள் உடலை சிதைத்து தலையைத் துண்டித்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் செயலைக் கண்டித்து குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் கொடியைத் தரையில் வரைந்து அதன் மீது ஏறி நின்று நூதன போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியான கிருஷ்ணா கதிக்குள் 250 மீட்டர் தூரம் வரை ஊடுருவி வந்த பாகிஸ்தான் சிறப்பு படையினர் கடந்த 1.5.2017 அன்று திடீரென இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நயீப் சுபேதார் பரம்ஜீத் சிங், தலைமைக் காவலர் பிரேம் சாகர் ஆகிய இரு எல்லை பாதுகாப்பு படை வீரர்களையும் சுட்டுக் கொன்று அவர்களது தலையை துண்டித்து உடல்களை சிதைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இந்திய ராணு வத்தை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து பாகிஸ் தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப் படும் என ராணுவ அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். ‘‘ராணுவ வீரர்களின் உடல்கள் சிதைக்கப் பட்டது காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ராணுவத்தின் மீது ஒட்டுமொத்த நாடும் முழு நம்பிக்கை வைத்துள்ளது. நமது வீரர்கள் பாகிஸ்தானுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்’’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களில் சிலர் சாலையில் பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடியை வரைந்து அதன் மீது நின்று அந்நாட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி சாலையில் வெள்ளை பெயிண்ட் அடித்து தேசியக் கொடி அடையாளத்தை அழித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon