மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

ஆட்டோ டிரைவரை மிரட்டிய எம்.எல்.ஏ.!

ஆட்டோ டிரைவரை மிரட்டிய  எம்.எல்.ஏ.!

கோவை மாவட்டம், அவினாசியின் அருகேயுள்ள ஹோப் காலேஜ் பகுதியில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டு இயங்கி வருகிறது. இந்த ஆட்டோ ஸ்டாண்டில் 30 ஆட்டோக்கள் இருக்கின்றன. இந்நிலையில், திமுக-வைச் சேர்ந்த நடராஜ் என்பவர் புதிதாக ஒரு ஆட்டோ வாங்கி ஸ்டாண்டில் நிறுத்த வந்தார். அப்போது அங்கு நின்ற அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இந்தப் பிரச்னை குறித்து அண்ணா தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் சிலர், ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் முறையிட்டனர். எனவே, ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. இதுகுறித்து ஆட்டோ டிரைவர் நடராஜிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. மிகவும் கோபமாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியதாகக் கூறிய நடராஜ், அவரிடம் பேசியதை வாட்ஸ்அப்பில் பரவ விட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. கூறியதாவது: வாட்ஸ் அப்பில் வெளியானது என்னுடைய பேச்சுதான், வீணாக பிரச்னை செய்யும் ஒருவரிடம் என்னால் கெஞ்சிக் கொண்டு பேச முடியாது. சில நேரத்தில் இதுபோல் பேசினால்தான் புரியும். அதேநேரத்தில் வாட்ஸ்அப்பில் நான் பேசியதையும், ஆட்டோ டிரைவர் நடராஜ் பேசியதையும் முழுமையாக வெளியிட்டால்தான் எல்லோருக்கும் உண்மை தெரியவரும். ஆனால் இவர் என்னுடைய பேச்சுகளை மட்டும் வெளியிட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon