மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

ஆரோக்கியம் பெற காளான் : அதைப் பெற பிரிட்டிஷ் அக்ரோ!

 ஆரோக்கியம் பெற காளான் : அதைப் பெற பிரிட்டிஷ் அக்ரோ!

ஒவ்வொரு அலுவலகங்களிலும் பெரும்பாலான ஊழியர்கள் காலை அல்லது மாலை ஆகிய இரண்டு இடைவேளை நேரங்களிலும் ஏதாவது ஒரு சத்தில்லாத உணவை வாங்கி வைத்துக்கொண்டு கொறித்துக்கொண்டே இருக்கின்றனர். இதனால் உடலில் கண்ட இடங்களில் சதை வந்துவிடுகிறது. தேவையற்ற கொழுப்பு உடலில் உண்டாகிவிடுகிறது.

மாறிவரும் நவீன சூழலில், தற்போது எல்லோரும் கணினியின் முன்பு அமர்ந்து வேலை பார்ப்பதால், முறையற்ற, சத்தில்லாத உணவுப் பழக்கத்தால் ஒவ்வொருவரின் உடலும் திடீரென குண்டாகிவிடுகிறது.

மேலும் ஒரே இடத்திலிருந்து வேலை பார்க்கும்போது, ரத்த ஓட்டமும் சீராகப் பாய்வதில்லை. இதனால் உடலில் ரத்த அழுத்தம், கண் அயற்சி, முதுகு வலி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, அலுவலகப் பழக்கங்களில் ஆரோக்கியத்தைக் கொண்டு வாருங்கள்.

அலுவலகத்தில் செய்யவேண்டிய உடல்சார்ந்த பயிற்சிகள்:

ஒரே நாற்காலியில் அமர்ந்து வேலை பார்ப்பது உடலின் வெப்பநிலையை அதிகரித்துவிடும். எனவே, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு தடவை எழுந்து, உங்கள் உடலை நகர்த்துங்கள். நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சிலநேரங்களில் எழுந்து நின்று வேலை பார்ப்பதற்குத் தயங்காதீர்கள். இதனால், உடலுக்குத் தேவையான கலோரிகள் எரிக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் பேணப்படும். போதுமான அளவு நீர் பருகுங்கள். இடைவேளையின்போது நல்ல சத்தான கலோரிகள் மற்றும் புரோட்டீன்களைத் தரும் உணவுகளை உண்ணுங்கள்.

இடைவேளைக்கு பெஸ்ட் சாய்ஸ் காளான்:

காளானில் லென்ட்டைசின், எரிட்டினைன் ஆகிய வேதிப் பொருட்கள் உள்ளன. இதில் எரிட்டினைன் கொழுப்பை நீக்கும் வல்லமை கொண்டவை. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் சீராக இயங்க உதவுகிறது. காளான் மூட்டுவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த வலி நிவாரணி. மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் ஆகியவற்றை முற்றிலும் சரி செய்கிறது. தினமும் 100 கிராம் காளானில் 35 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகின்றன.

காளான் வறுவல் செய்யும் முறை:

முதலில் காளான்களை வாங்கி, நன்கு நீரில் சுத்தம் செய்துகொண்டு நறுக்கிக் கொள்ளவும். மேலும் காளான்களை நீரில் ஊற வைத்து எடுத்து நறுக்கக்கூடாது. அதன்பின், வெங்காயத்தை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின், இரண்டு பூண்டு இதழ்களையும் பச்சை மிளகாயையும் நன்கு நறுக்கிக் கொள்ளவும். பின், வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய்யை விட்டு நன்கு சூடாக்கவும். பின், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அதன்பின், பூண்டு மற்றும் மிளகாய், சிறிதளவு மிளகுத் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறவும். பின், சுமார் 4 நிமிடங்கள் வரை சூடு படுத்தவும். அதன்பின், மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை அந்த மசாலா கலவையில் சேர்க்கவும். பின், சிறிதளவு உப்பு சேர்த்து நல்ல ஒரு ருசி கிடைத்தவுடன், நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். சில நிமிடங்கள் மிதமான சூட்டில் அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்யவும். சில நிமிடங்களில் காளான் துண்டுகளைச் சுற்றி எண்ணெய் மிதக்க ஆரம்பித்தால் சுவையான, ருசியான காளான் வறுவல் தயார்.

பார்ப்பதற்கு முறுகலாகவும், சுவைப்பதற்கு அசைவத்துக்கு இணையாகவும் இருக்கும் காளான்கள், உடல் எடையை சரியாக பராமரிக்க உதவுபவை. எனவே, தேவையற்ற எண்ணெய்ப் பொருட்களை இடைவேளை நேரங்களில் நொறுங்கத் தின்று, நம் உடலைக் கெடுத்துக் கொள்வதைவிட, சத்துமிக்க காளான்களை உண்டு நம் மேனியை வலுப்படுத்தலாம்.

அனைவரும் விரும்பும் தரமான காளான்களை, நமக்கு ஏற்ற விலையில் பெற பிரிட்டிஷ் அக்ரோ புராடக்ட்ஸ் இந்தியா லிமிடெட் கம்பெனியை அணுகி எளிதில் பெற்றுக்கொள்ளலாம்.

காளான் உணவுகளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்வோம்.

காத்திருங்கள்...

காளான் - சில்லறை மற்றும் மொத்த விற்பனை:

பட்டன் காளான்கள் பிரிட்டிஷ் அக்ரோ நிறுவனப் பண்ணைகளில் கிலோ ரூ. 150 என்ற விலையில் கிடைக்கிறது.

முகவரி:

பிரிட்டிஷ் அக்ரோ புராடக்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
(அக்‌ஷயா பொறியியல் கல்லூரி அருகில்)
புழுதிவாக்கம் (அஞ்சல்), மதுராந்தகம் தாலுகா
காஞ்சிபுரம் மாவட்டம். தமிழ்நாடு - 603 314
தொலைபேசி : 8939991194

கடைஎண்: டி-29
பெரியார் காய்கறிச் சந்தை
கோயம்பேடு, சென்னை
தமிழ்நாடு - 600 092
தொலைபேசி : 8939994236

எண்: 208
மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை
மாட்டுத்தாவணி, மதுரை - 625007
தொலைபேசி: 8939821172

எண்: 205
சின்னசுவாமி நாயுடு சாலை
நியூ சித்தாபுத்தூர், கோயம்புத்தூர்
தொலைபேசி : 8939994235

விளம்பர பகுதி

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon