மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

நதிகளை மீட்போம் !

நதிகளை மீட்போம் !

"நதிகளை மீட்போம்" இயக்கத்தின் தேசிய அளவிலான மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று (செப்டம்பர் 3) கோவையில் தொடங்கியது. வேகமாக வற்றி வரும் நம் தேசத்து நதிகளை மீட்க , அவற்றின் அடிப்படை நீரோட்டத்தை அதிகரிக்க வரையறை வகுத்து, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய, 'நதிகளைமீட்போம் ' என்னும் விழிப்புணர்வு இயக்கம் உருவாகி வருகிறது.

இது பற்றிய விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி ,கோவையில் இன்று வ.உ.சி. மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த பேரணிக் கூட்டத்தில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள், பஞ்சாப் ஆளுநர் திரு.வி.பி.சிங் பத்நோர், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் திரு.வீரேந்திர சேவாக், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் K. ராமசாமி, இந்திய கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜ்,கார் பந்தய வீரர் திரு. நரேன் கார்த்திகேயன், மஹிந்திரா குழுமத்தின் மூத்த துணை இயக்குநர் விஜய் ராம் நக்ரா, ஆகியவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

இதில் கோலாகலமான இசைநிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்,விவசாயிகள்,வியாபாரிகள், தனியார் நிறுவனங்கள்,ராணுவ வீரர்கள் என பல தரப்பினரும் பங்கேற்கும் இந்தநிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் .

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் வாழ்வின் ஆதாரமாகவும் நம் நாகரிகத்தின் பிறப்பிடமாகவும் இருந்துள்ள ஜீவா நதிகள் அழிந்து வருகின்றன.வற்றி வரும் நதிகளின் நீரோட்டத்தை அதிகரிப்பது பற்றி கடந்த ஒரு மாதமாக தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாட்டிலும், நாடு முழுவதும் பிற மாநிலங்களிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மற்றும் அரசு அலுவகங்கள், சமூக நல அமைப்புகள் உட்பட எல்லா இடங்களிலும், பொது மக்களிடையே, தீவிரமான விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடந்து வருகிறது.

சட்டம் கொண்டு வரவேண்டும்

நம் மண் வளத்தையும், நதியின் நீரோட்டத்தையும் அதிகரிக்கத் தேவையான தீர்வுகளை விஞ்ஞான ரீதியாக வரையறுத்து , விவசாயியின் வாழ்வில் சாதகமான பொருளாதார மாற்றத்தை கொண்டுவந்திட ஒரு சட்டத்தை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். இதை நடைமுறைக்கு கொண்டு வர அரசிற்கு ஒரு பரிந்துரை தயார் படுத்தப்பட்டு வருகிறது. வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், பொருளாதார மற்றும் அரசியல் சட்ட நிபுணர்கள், ஆகியவர்களைக் கொண்ட ஒரு குழு இந்த அரசியல்சட்ட பரிந்துரையை உருவாக்கி உள்ளனர். இதில் முக்கியமாக, நதி நெடுகிலும் இருபுறமும் குறைந்தது ஒரு கிலோமீட்டர் அகலத்திற்கு மரங்கள் உருவாக்க வலியுறுத்தப்படும். இது மத்திய அரசிடமும் மாநில முதல்வர்களிடமும் சமர்ப்பிக்கப்படும். அதே சமயம் பொதுமக்களின் பேராதரவிருந்தால் மட்டுமே இது போன்ற அரசியல் சட்டம் அமலாக்கப்பட வாய்ப்புள்ளது.

சத்குரு நடத்தும் மாபெரும் பேரணி

இதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அவர்கள், இன்று முதல் 30 நாட்களுக்கு நதிகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று அவருடைய 60வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பேரணியில் சத்குரு அவர்கள் நாடு முழுவதும் தாமே சுமார் 7000 கிமீ தூரம் வாகனம் ஓட்டிச் செல்வார். அவரோடு வழியில் பொதுமக்களும், பல தலைவர்களும், பிரபலங்களும் கலந்துகொள்வார்கள். இந்த பேரணயின் பாகமாக பயணிகளுடன் (BSF) எல்லை பாதுகாப்பு படையினரும் பயணிப்பார்கள்.

இந்த பயணம் அக்டோபர் 2ம் தேதி புது தில்லியில் முடிவடையும். இந்த விழிப்புணர்வு பேரணி 16 மாநிலங்களின் வழியாக செல்லும். 20க்கும் மேற்பட்ட நகரங்களில் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.இதில் 16 மாநிலங்களின் முதல் அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அப்போது இந்த பரிந்துரை அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும்

தமிழகத்தில் கோவை, கன்னியாகுமாரி, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய நகரங்களில்ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மிஸ்டு கால் கொடுத்து ஆதரவை தெரிவிக்கலாம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், இந்திய தொழில்துறை குழுமம் (CII), இந்திய துணை ராணுவம் (CRPF),எல்லை பாதுகாப்புபடையினர்(BSF),இந்திய ரயில்வே, உட்பட பல அமைப்புகள் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கின்றனர். கட்சிபேதமில்லாமல், மத பேதமில்லாமல் பல தலைவர்களும் தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்திவருகிறார்கள்.முன்னூற்றுக்கும் மேற்பட்ட அரசாங்க அதிகாரிகள், நடிகர்கள்,

கிரிக்கெட் வீரர்கள்,ஆகியோர் கடந்த ஒரு மாதமாக இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 80009 80009 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம்

ஆதரவு அளித்துள்ளவர்கள் சிலர்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் அனைத்து இந்திய இமாம் அமைப்பு தலைவர் இமாம் உமர் அஹ்மத் இலியாசி ஆகியோர் பிரச்சாரத்திற்கு தங்கள் ஆதரவை உறுதி செய்துள்ளனர்.

சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ், தேவகவுடா, கேப்டன் அம்ரிந்தர் சிங்க், சந்திரபாபு நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் ,உமா பாரதி,Dr.ஹர்ஷவர்தன் உட்பட பல கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் மஹிந்திரா, கிரண் மஜும்தார் ஷா, செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்,

திரைப்பட படைப்பாளர்கள் , ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா,சேகர் கபூர், நடிகர்கள் கஜோல், ரிஷி கபூர்,தியாமிர்ஸா,ஜூஹி சாவ்லா, அனுபம் கெர், கிரிக்கெட் வீரர்கள்ஹர்பஜன் சிங்க் ,ஷிகார் தவான், செஃப் சஞ்சீவ் கபூர், மலையாள நடிகர் மோகன்லால், பாஹுபலி புகழ் ராணா மற்றும் இசையமைப்பாளர் ஷங்கர் மகாதேவன் ஆகியோர் இம்முயற்சியை ஆதரித்துள்ளனர்.

ஷாருக் கான், சல்மான் கான் ,அக்ஷய்குமார் ஆகிய நட்சத்திரங்கள் தங்கள் ஆதரவை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஷைலேந்திர பாபு IPS, வணிகர் சங்கத் தலைவர், பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி வெள்ளையன், பேராசிரியர்.ஞானசம்பந்தன், எழுத்தாளர் ஜெயமோகன் என அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சுஹாசினி மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் , தனுஷ், குஷ்பு,பார்த்திபன், விவேக், கலைப்புலி தாணு, ரேவதி, எஸ்.வி.சேகர், அமலா பால், பிரகாஷ் ராஜ்,ராதிகா சரத்குமார் , காஜல் அகர்வால்,தமன்னா, தொகுப்பாளினி டிடி, ரம்யா கிருஷ்ணன் , திரிஷா உட்பட பலரும் இது பற்றி தொடர்ந்து வலைதளத்தில் ஆதரவுப்பதிவுகள் செய்து விழிப்புணர்வு உருவாக்கி வருகின்றனர்.

தொழிலதிபர்களில் முருகவேல் (தமிழ்மாட்ரிமொனி), Dr .பிரதாப் ரெட்டி , ஐயப்பன் முத்தையா(செட்டிநாடு குழுமம் ), கெவின் கேர் சி.கே ரங்கராஜன், கே.ஜி .குழுமம் ,சவேரா குழுமம் , சோழா குழுமம், ரோட்டரி கிளப், அரிமா சங்கம் போன்றவர்கள் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஞாயிறு, 3 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon