மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 9 செப் 2017

வாட்ஸ்அப் வடிவேலு!

வாட்ஸ்அப் வடிவேலு!

‘வாழ்க்கைங்கிறது ஒரு வட்டம்’, ‘பொதுவா வாழ்க்கைன்னாவே’... அப்படி ஆரம்பிச்சாலே தப்பிச்சு ஓடுவோம். அந்த அளவுக்கு கருத்து சொல்லி வாட்ஸ்அப் வள்ளல்கள் வரி வரியா எழுதி அனுப்புவாங்க.

ஆனா, புதுசா ஒருத்தரு சொல்றாரு... ‘ஒரு ஆண்மகனின் படுக்கை அறையில் வரும் வாசனையை வைத்தே வாழ்க்கை என்றால் இதுதான் என்று கூறி விடமுடியும்’ என்று.

அதனை காண்போமா?

திருமணம் ஆன முதல் மூன்று வருடங்கள்... பூக்கள், பழங்கள், சென்ட் இவைகளுடைய வாசனை இருக்கும்.

அடுத்த ஐந்து வருடங்களில்... குழந்தைகளுடைய பவுடர், சோப், எண்ணெய், அப்புறம் குழந்தையின் சிறுநீர், மலம் இவற்றின் வாடை இருக்கும்.

அடுத்த ஆறு வருஷத்துல... தலைவலி, உடம்புவலி, கால்வலி, கைவலி, மூட்டுவலி, முதுகுவலின்னு இது போன்ற வியாதிகளின் மருந்து மாத்திரை வாசனை இருக்கும்.

அதுக்கு அடுத்தடுத்த... வருஷங்கள்ல ஊதுபத்தி, சூடம், சாம்பிராணி போன்ற மங்கலகரமான பெருள்களின் வாசனை இருக்கும்.

கடைசியா... கறிக்குழம்பு, உணவு பண்டங்கள், கோழி குழம்பு வாசனையிருக்கும். அப்ப நம்ம போட்டோவுல மாலை மாட்டி ஊதுவத்தி செருகியிருக்கும்.

இதான்பா லைப்...

பரங்கிமலை பார்டர்ல உட்கார்ந்து யோசிப்பாங்களோ?

தொடரும்...

- கிரேஸி கோபால்

சனி, 9 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon