மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 11 செப் 2017

வாட்ஸ்அப் வடிவேலு!

வாட்ஸ்அப் வடிவேலு!

வாட்ஸ்அப் அலப்பறைகள்...

கும்பகோணம் சிட்டி யூனியன் பேங்கிலே பழைய நோட்டை மாற்றி புதிய நோட்டு வாங்க வந்த பெண்ணிடம் பேங்க் கேஷியர் சீரியல் நம்பர் எழுத சொன்னார். எழுதியதைக் கண்டு கேஷியர் அதிர்ந்து போனார்.

1.தெய்வமகள், 2.வம்சம், 3.வாணி ராணி, 4.பிரியமானவள், 5.நாகினி...

(நல்லா வருவீங்கம்மா நீங்கள்லாம்... நல்லா வருவீங்க. ஆமாம் அந்த கேஷியர் என்னவானாரு?)

*

உலகத்திலே பொய் அதிகமாக பேசற இடம் கோர்ட்

உண்மை அதிகமாக பேசற இடம் மதுக்கடை

(நமக்கெதுக்கு வம்பு, எதுவும் பேசாம போவோம்)

*

எல்லா ஜெராக்ஸ் கடைலயும்

பொண்ணுங்க உட்கார

வெச்சுருக்காங்க..

அவசரத்துக்கு

மார்க் ஷீட் ஜெராக்ஸ் எடுக்க

போனா அட்டு பிகர்கூட நம்ம

மார்க்க பாத்து சிரிக்குமே...

இப்படி இருந்தா நாடு எப்படி

வல்லரசு ஆகும். டல்லரசா தான்

ஆகும்.

(நல்லா சொன்னீங்க பாஸ். அதுக்குத்தான் நான் லஞ்ச் ப்ரேக்ல ஜெராக்ஸ் எடுக்கப்போவேன்)

*

வரலாற்றில் இன்று :

இதே மே மாசம் 1998இல் ரீமா சென் மேஜராகி இன்றோடு 18 வருடங்கள் நிறைவடைகிறது.

(மிடில... இவர்தான் சரித்திரத்தில் இடம்பெறப்போகும் அப்டேட் குமாரு)

*

பெண்: ஹலோ ஆம்புலன்ஸ் சர்வீசா?

ஊழியர்: ஆமா மேடம் என்னாச்சு?

பெண்: காபி குடிக்கும்போது கொஞ்சம் காபி என் சாரியில கொட்டிடுச்சு.

ஊழியர்: மேடம் இதுக்கெல்லாம் கண்டிப்பா ஆம்புலன்ஸ் வேணுமா?

பெண்: அதில்லைங்க... காபி கொட்டினதும் என் புருஷன் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டாரு.

ஊழியர்: புரியுது மேடம் உடனே வர்றோம்.

(ஒரு புறாவுக்குப் போரா... பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது!)

தொடரும்...

- கிரேஸி கோபால்

திங்கள், 11 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon