மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

இப்போதெல்லாம், ‘அவர்கள் நம்மைவிட அதிக பணக்காரர்களாக இருக்கிறார்களே, வசதி படைத்தவர்களாக இருக்கிறார்களே’ என நினைத்து பொறாமைப்படுவதைக் கடந்து, ‘இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்களே’ என்று பொறாமைப்படும் நிலைமை வந்துவிட்டது.

முன்பெல்லாம், ‘அட நீங்களும் தஞ்சாவூரா... நானும் தஞ்சாவூர்காரன்தான்’ என்று பெருமைபட்டுக்கொள்ளும் நிலை மாறி... ‘அட... உங்களுக்கும் சுகரா... எனக்கும் சுகர் இருக்கு’ என்று சொல்லிக்கொள்ளும் நிலைமை ஆகிவிட்டது.

கிட்னி, லிவர், குடல், கண்கள், பற்கள் என தலைமுடி முதல் பாதம் வரை அனைத்துக்கும் தனித்தனி மருத்துவர்களும் வந்துவிட்டனர். உடல்நலனில் சற்று கவனமாக இருந்தாலே போதும். அனைவரும் பொறாமைப்படும் அளவுக்கு ஆரோக்கியமாக வாழ்ந்து காட்டலாம். முறையான மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா, சத்துள்ள உணவுகள் ஆகியவற்றை மேற்கொண்டாலே ஆரோக்கியமான வாழ்வுதனை வாழலாம்.

சரி... இனி தினமும் மின்னம்பலத்தில் இந்த ஹெல்த் ஹேமாவின் டிப்ஸ்களை நீங்களும் படித்து பயன்பெறுங்கள். நம் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே நம் ஆரோக்கியம் காத்திடலாம்.

“பையனுக்கு தொடர்ச்சியான வறட்டு இருமலா இருந்துச்சு, ஹாஸ்பிடல்க்கு போனேன். அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்ன்னு சொல்லி, மொத்தமா ஆயிரத்து முந்நூறு ரூபா ஆச்சு. இதுல சாப்பாட்டுக்கு முன்னாடி வேற... சாப்பாட்டுக்குப் பின்னாடி வேறன்னு தனித்தனி மாத்திரை மருந்தெல்லாம் குடுத்துருக்காங்க” எனப் புலம்பும் பெற்றோர்களே... பாலில் மஞ்சளை போட்டு கொதிக்க வைத்து குடித்தாலே போதுமே. இதுமட்டுமல்ல... இதுபோன்ற மேலும் உடல் நலம்காக்கும் பல ஆரோக்கியக் குறிப்புகள் இதோ...

* தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.

* வாழைப்பூவைப் பொடிப் பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.

* வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.

* மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கிவிடும்.

* கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

*பல் வலி குறைய, துளசி இரண்டு கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் அழுத்தி வர வலி குறையும்.

* ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத்தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் கண் நோய் வராது.

* தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கறிவேப்பிலைகளைச் சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களுக்குத் தொடர்ந்தால் உடல் எடை குறையும்.

* இஞ்சியைச் சாறெடுத்து கொஞ்சம் உப்புப் போட்டு குடித்தால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.

* தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வராது.

* இஞ்சியைச் சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கிவிடும்.

* துளசி இலைகள் போட்டு வைத்த தண்ணீரைக் குடித்தால் தொண்டைப்புண் வராது.

* கடுமையான இருமல் இருந்தால் மூன்று கோப்பை தண்ணீருடன் வெற்றிலையையும் மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

ஞாயிறு, 1 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon