மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

ஸ்டீல்: உற்பத்தி - விற்பனை உயர்வு!

ஸ்டீல்: உற்பத்தி - விற்பனை உயர்வு!

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல விற்பனையும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வியாழக்கிழமை (05.10.2017) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “டாடா ஸ்டீல் நிறுவனத்தின் விற்பனையாகக்கூடிய உருக்கு உற்பத்தி இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 18 சதவிகிதம் அதிகரித்து 5.98 மில்லியன் டன்னாக உள்ளது. இதே காலகட்டத்தில் இதற்கு முந்தைய நிதியாண்டில் உருக்கு உற்பத்தி 5.06 மில்லியன் டன்னாக இருந்தது.

அதேபோல ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் ஸ்டீல் விற்பனையும் 5.88 மில்லியன் டன்னாக உள்ளது. இதே காலகட்டத்தில் இதற்கு முந்தைய நிதியாண்டில் 4.77 டன் உருக்கு விற்பனையாகியுள்ளது. இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் 12 சதவிகிதமாக உள்ளது. ஆண்டு வளர்ச்சி விகிதம் 17 சதவிகிதமாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் கடந்த ஆண்டு (2016-17) கச்சா உருக்கு உற்பத்தி 27.5 மில்லியன் டன்னாகும். இந்நிறுவனம் தற்போது 26 நாடுகளில் ஸ்டீல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது