மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

அழகான இதழ்கள் மற்றும் பற்கள்: பியூட்டி ப்ரியா 07

அழகான இதழ்கள் மற்றும் பற்கள்: பியூட்டி ப்ரியா 07

முகத்தைப்போல் உதட்டுக்கும் பற்களுக்கும் தனித்தனியாக நேரம் செலவழித்துதான் பாதுகாக்க வேண்டும் என்றில்லை. நம் அன்றாட வேலைகளினூடே அவற்றையும் சில நிமிடங்கள் கவனித்தாலே போதுமானது.

காலையில் பல் துலக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவிவிட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். அதேபோல் முகத்துக்கு ஸ்க்ரப்பிங் பண்ணும்போது கடைசியாக உதடுகளில் ஒருமுறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் உபயோகித்தால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும். ஏற்கெனவே கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரின் (ப்ளெயின் க்ளிசரினைக் கேட்டு வாங்குங்கள். லிப் க்ளாஸ் அல்ல) தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும்கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆனால், பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான சாய்ஸ். அதிக வேசலின், லிப்க்ளாஸ் உபயோகம்கூட உதடுகளை கறுப்படைய வைக்கும். இயற்கையான தயிர், பாலாடைகூட வேசலினுக்குப் பதிலா உபயோகிக்கலாம்.

உதடு மட்டும் அழகா இருந்தால் நிச்சயம் போதாது. பற்களும் அழகாக, சுத்தமாக இருப்பது அவசியம். அழகான இதழ்கள் விரித்து நாம் சிரிக்கும் சிரிப்பை இன்னும் வசீகரமாக காட்ட பற்களின் பராமரிப்பு மிகவும் அவசியம். தினமும் பல் துலக்குவதோடு Floss செய்வதும் அவசியம். பற்களை வருடத்துக்கு ஒருமுறையேனும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 30 வயதுக்குப் பிறகு பற்களின் இடையே இடைவெளி தோன்ற ஆரம்பிக்கும். எப்போதும் பல் துலக்கிய பிறகு பற்களை இரண்டு விரல்களால் கீழ்ப்புறமாக (விசில் அடிப்பது போல கைவிரல்களை வைத்துக்கொண்டு) ஈறுகளில் விரல் பட அழுத்தி விடுவது அவசியம். இதனால் இடைவெளி ஏற்படாமல் ஓரளவு பாதுகாக்கலாம். அதோடு கால்ஷிய சத்துகளைத் தேவையான அளவு எடுத்துக்கொள்வதும் பற்களை இடைவெளியிலிருந்து காப்பாற்றும்.

இடைவெளி ஏற்பட்டதும், உடனே கால்சியம் மாத்திரகளை எடுத்துக் கொள்வதால் இதை சரி செய்துவிட முடியாது. கால்சிய சத்து நமக்கு உடம்பில் ஒரே நாளில் ஏற்படும் விஷயமல்ல. அதற்கு நீண்ட நாள்கள் ஆகும். எனவே, வரும்முன் காப்பதே சிறந்தது. வாரம் ஒருமுறை எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பற்களை துலக்கினால் பற்கள் பளிச்சென்று ஆகும். அடிக்கடி ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் செய்து கொள்வதைக்காட்டிலும், காபி, டீ அதிகம் குடிக்காமல் அப்படியே குடித்தாலும் வாயை ஒவ்வோர் உணவுக்கு பின்னும் கொப்பளித்தாலே பற்கள் கறை பிடிக்காமல் பளிச்சென்று இருக்கும். பல் இடுக்கில் உணவுத் துகள்கள் மாட்டிக்கொண்டால் எக்காரணம் கொண்டும் டூத் பிக், சேப்டி பின் என்று உபயோகிக்காமல் முடிந்த வரை Floss உபயோகித்து நீக்க வேண்டும். இடைவெளி ஏற்படாமல் இருக்க நல்ல தரமான, மெலிதான Floss உபயோகிக்க வேண்டும். மேலும், ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் அடிக்கடி செய்வதால் பல் கூச்சம் ஏற்படும். எனவேதான் அதை அடிக்கடி செய்து கொள்ளக் கூடாது. டூத் பிரஷ் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும்.

ஈறுகளில் ரத்தம் வடிவது, வாய் துர்நாற்றம் போன்றவற்றுக்கும் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. பல சமயங்களில் வாய் துர்நாற்றத்துக்கு வயிற்றில் ஏற்படும் அல்சரும்கூட காரணமாக இருக்கும். ரூட் கேனால் ட்ரீட்மெண்ட் அல்லது புதிதாக பல் பொருத்தும்போதோ முடிந்தவரை பல் கேப்பை (cap) நமது மற்ற பல்லின் நிறத்துக்குச் சரியாக பொருந்துமாறு தேர்ந்தெடுத்து அதனையே பொறுத்த வேண்டுமென்று பல் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளலாம். சில்வர், கோல்ட் என்று தனியாக தெரிவதைவிட இப்படி செராமிக்கில் பல் நிறத்துக்கே கேப் போட்டுக் கொண்டால் வித்தியாசம் தெரியாது. பற்களை அழகுப்படுத்திக் கொள்வதைவிட மிகவும் முக்கியமான ஒரு விஷயம் வாய் துர்நாற்றத்தை தடுப்பது. ஏனெனில் பலருக்கு தனது வாய் துர்நாற்றமடிக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் இருக்கும். இவர்கள் தானாக செக் செய்து கொள்வதைக்காட்டிலும் (தானாக கண்டுபிடிக்க தெரியாமல் இருப்பவர்கள்) குடும்ப உறுப்பினர்கள், வாழ்க்கைத் துணை போன்றவர்களிடம் கேட்பது நல்லது. இதற்காக வெட்கப்பட்டுக்கொண்டு இருந்தால் நமக்கு தெரியாமல் அடுத்தவர் நம்மைக் கிண்டல் செய்ய நாமே காரணமாகி விடுவோம்.

இப்போது அழகுப்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்ப்போம். உதடுகளுக்கு என்று தனி கவனம் கொடுத்து மேக்கப் போடும் நாள்களில், எக்காரணம் கொண்டும் கண்ணுக்கு அதிக மேக்கப்பைப் போட்டு விடாதீர்கள். அது மேக்கப்பை கெடுத்துவிடும். உதடுகளுக்கு மேக்கப் போடுவது சுலபமாக செய்யக்கூடிய விஷயமாக இருக்க வேண்டும். மேக்கப் போடும்போது முகத்துக்கு போடும் மாய்ச்சுரைசிங் க்ரீம் மற்றும் பவுண்டேஷனை உதடுகளுக்கும் லேசாக தடவி, பிறகு லிப்ஸ்டிக் போட்டால் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கும். லிப் ஷேப்பை மாற்றுகிறேனென்று, லிப் பென்சில் கொண்டு கோடு வரைவதற்கு முன்பு அது நீண்ட நேரம் தாக்குப் பிடிக்குமா என்று தெரிந்துகொள்ளுங்கள். அப்படி நீண்ட நேரம் இல்லாத லிப் பென்சிலாக இருந்தால் உதடுகளின் உள்ளே அல்லது வெளியே உள்ள லிப்ஸ்டிக் மட்டும் தெரிந்து முகத்தை அசிங்கமாக காட்டி விடும்.

லிப்ஸ்டிக் போட்ட பிறகு அதிகம் எண்ணெய் பதார்த்தங்களைச் சாப்பிடாமல் இருப்பதும் லிப்ஸ்டிக்கை கரையாமல் வைத்திருக்கும். லிப்ஸ்டிக் போட்டு ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கழித்து லிப்கிளாஸ் போட்டால் நன்றாக ஸ்மூத்தாக இருக்கும். சின்னதாக இருக்கும் உதடுகளைப் பெரிதாக காட்ட லிப் பென்சில் உபயோகித்து ஷேப் மாறுவதைக் காட்டிலும் ப்ளம்ப்பி லுக் தரும் லிப் ஸ்டிக்குகள் உபயோகிக்கலாம். இந்த வகை லிப்ஸ்டிக்குகள் உதடுகளை கொஞ்சம் பெரிதாக்கி காட்டும். லிப் லைனர் டார்க் கலரிலும், லிப் ஸ்டிக் அதைவிட கொஞ்சம் லைட்டான கலரிலும் உபயோகிப்பது அழகான லுக்கைத் தரும். ஆனால், இதையே மாற்றி லிப் லைனர் லைட் கலரிலும், லிப்ஸ்டிக் டார்க் கலரிலும் போட்டால் நன்றாக இருக்காது. லிப்ஸ்டிக் போட்டதே தெரியக் கூடாது. ஆனால் அந்த லுக் மட்டும் வேணும்னு நினைக்கறவங்க கூடுமானவரை Matt Finish வகை லிப்ஸ்டிக்குகளை உபயோகிக்கலாம். Gloss வெரைட்டி சின்ன வயதுக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். லிப்ஸ்டிக் ஷேடு பற்றி அறிய ஏற்கெனவே மன்றத்தில் இருக்கும் என்னுடைய இந்திய முகங்களுக்கேற்ற மேக்கப் ப்ராடக்ட்ஸ் என்ற பதிவினை பாருங்கள். கொஞ்சம் மாடர்ன் மற்றும் பெப்பி லுக்குக்கு லிப்ஸ்டிக், லிப் லைனர் இரண்டுமே ஒரே நிறத்தில் Matt finish ல் போட்டால் பார்க்க நேச்சுரலாக இருக்கும். சிம்ரன், கேத்தரீனா கைஃப் போன்றவர்கள் இந்த வகை டெக்னிக்கில் லிப்ஸ்டிக் அப்ளை செய்திருப்பார்கள். ஆனால், லிப் க்ளாஸ் போடாமல் இருந்தால்தான் இந்த லுக் வரும்.

“கார்கால மேகமென கண்ட

கானகத்து மயிலும்

கொண்டை உயர்த்தி

தோகை விரிக்கக்

கண்டேன் உன் கூந்தலழகைக் கண்டு” என பலரும் உங்களை வர்ணித்திட பற்பல கூந்தல் டிப்ஸ்களோடு நாளையும் வருவாள் பியூட்டி ப்ரியா.

பியூட்டி ப்ரியா 01

பியூட்டி ப்ரியா 02

பியூட்டி ப்ரியா 03

பியூட்டி ப்ரியா 04

பியூட்டி ப்ரியா 05

பியூட்டி ப்ரியா 06

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon