மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ஸ்டார் ரியல் ஸ்டோரி: பரத் - வெங்கட் சுபா

ஸ்டார் ரியல் ஸ்டோரி: பரத் - வெங்கட் சுபா

19 வயதில் அறிமுகமாகி 14 வருடத்தில் கிட்டத்தட்ட 32 திரைப்படங்களில் நடித்து அதில் 9 திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமையப் பெற்றவர்.

பாய்ஸ், செல்லமே, 4 தி பீப்பிள் (மலையாளம்), காதல், வெயில், எம்டன் மகன், பட்டியல், கண்டேன் காதலை போன்ற படங்களுக்குப் பின் காணாமல் போனவருக்கு 2011இல் வெளியான வானம் படத்துக்குப் பின் ஏற்றம் இருந்தது. எனினும் 2017இல் வந்த கடுகு இவருக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தது.

பரத் தமிழ் திரையுலகில் ஒர் விசித்திரம் எனலாம். பொதுவாக நடிகனாக நுழைந்து நட்சத்திரமாக, உயர் நட்சத்திரமாக முயற்சி செய்வது ஒவ்வொரு கதாநாயகனுக்கும் லட்சியம். அதற்கு முதலில் சிறந்த இயக்குநர்களை வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக்கொண்டு, பின்னர் வணிக ரீதியிலான படங்களில் தன் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்திக் கொள்வார்கள். ஆனால், பரத் வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்கு முழு ஒத்துழைப்பு தந்து வெற்றி பெற்ற பின் வணிக ரீதியான படங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கோட்டை விட்டவர்.

காதலும், வெயிலும் தந்த பெயரைச் சரியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லாமல் மசாலா பட கதைத்தேர்வில் பலமுறை சரிந்து விழுந்தவர். பேரரசு போன்றவர்கள் கூட பரத் படம் என வரும்போது வெற்றி தராதது துரதிருஷ்டமே.

இருப்பினும் ஒரு நடிகனாக எந்த படத்திலும் குறை வைத்தது இல்லை என்பது இவரது தனித்தன்மை. கிசு கிசு அல்லது கால்ஷீட் சொதப்பல் போன்ற கெட்ட பெயர் ஏதுமின்றி ஒரு தொழில்முறை நடிகனாக தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் உரிய மரியாதை தருபவர். தேக, மன ஆரோக்கியத்தில் இவரை மிஞ்ச ஆள் கிடையாது. சம்பள விஷயத்திலும் ஒரு நேர்மையான கொள்கை உண்டு. தயாரிப்பாளர்கள் சிலருக்கு விட்டுக்கொடுத்ததும் உண்டு.

இப்படி ஒரு தனித்தன்மை உடைய இவர் கதை தேர்வு விஷயத்தில் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தி அதிகம் ஆசைப்படும் நடிகர்கள் வரிசையில் சேராமல், சமீபத்திய முடிவு போலவே நல்ல கதாபாத்திரம் எனில் எப்போதும் தயார் என ஒரு பிரகடனம் செய்தால் இவரது பயணம் எப்போதும் தொடர்கதைதான்.

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 1

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 2

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 3

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 4

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 5

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 6

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 7

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 8

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 9

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 10

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon