மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

கோலிக்கு கங்குலி புகழாரம்!

கோலிக்கு கங்குலி புகழாரம்!

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆசிய மண்ணில் மட்டுமே சாதிக்க முடியும் என பல முன்னாள் கேப்டன்கள் கருத்து தெரிவித்துவந்த நிலையில், வெளிநாட்டு மண்ணிலும் சாதிக்கும் என முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைச் சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி 9-0 என அத்தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 4-1 எனக் கைப்பற்றியது. இதனையடுத்து ஆசிய மண்ணில் மட்டுமே இந்திய அணி சாதிக்க முடியும் எனப் பல முன்னாள் கேப்டன்கள் கருத்து தெரிவித்துவந்தனர்.

இந்திய அணிக்கு இரண்டு (T20 மற்றும் 50 ஓவர்) உலகக்கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் தோனி. இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர், கேப்டன் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தற்போது விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவரது சிறப்பான ஆட்டத்தால் பல முறை இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதனையடுத்து இவரது தலைமையில் வெளிநாட்டு மண்ணிலும் இந்திய அணி சாதிக்கும் என முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில், ‘‘இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகும் தகுதியை விராட் கோலி பெற்றுள்ளார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அடுத்த 15 மாதங்களில் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. மேலும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு சிறந்த அணியைத் தயார் செய்து, சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறார். அந்நிய மண்ணில் இந்திய அணி சவால்களைச் சந்திக்க நேர்ந்தாலும் தற்போதைய அணியால் எங்கும் சிறப்பாக செயல்பட முடியும்” என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon