மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

டெங்கு ஒழிப்பு: சுனாமி வேகத்தில் தமிழக அரசு!

டெங்கு ஒழிப்பு: சுனாமி வேகத்தில் தமிழக அரசு!

‘டெங்கு ஒழிப்புப் பணியில், தமிழக அரசு சுனாமி வேகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது’ என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 06) செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், “டெங்கு ஒழிப்புப் பணியில் தமிழக அரசு சுனாமி வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக 400 பேர் இறந்ததாக மு.க.ஸ்டாலின் கூறுவது தவறானது” என்று தெரிவித்தார்.

இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “டெங்கு ஒழிப்பு விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தேவை. உள்ளாட்சிப் பிரதிதிகள் இல்லாததன் காரணமாகவே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon