மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

வேலைவாய்ப்பு குறைவது நல்ல அறிகுறி!

வேலைவாய்ப்பு குறைவது நல்ல அறிகுறி!

இந்தியாவில் உள்ள முன்னணி 200 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதென்பது மிகவும் நல்ல அறிகுறி என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இந்தியப் பொருளாதார மாநாடு அக்டோபர் 05 அன்று டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், “இந்தியாவின் டாப் 200 நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களைக் கணிசமாகக் குறைத்துவிட்டன" என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய பியூஷ் கோயல் "நாட்டின் முன்னணி 200 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு விகிதம் குறைந்து வருவது மிகவும் நல்ல அறிகுறியாகும். இன்றைய நிலையில் இளைஞர்கள் வேலை தேடுவதை விரும்பவில்லை. இவர்கள் வேலையை உருவாக்க விரும்புகிறார்கள். இந்த நாடு புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க விரும்புகிறது” என்று கூறினார்.

மேலும், ரயில்வே துறையில் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் குறைவில்லாமல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது என்றும் பியூஷ் கோயல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon