மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

‘பொங்கல்’ நாயகி கீர்த்தி சுரேஷ்!

‘பொங்கல்’ நாயகி கீர்த்தி சுரேஷ்!

கோலிவுட்டின் பெரிய படங்கள் குறிவைக்கும் பொங்கல் விடுமுறை, இந்த முறை கேட்பாரற்று கிடக்கிறது. விஜய்யின் மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாவதுடன், அவருக்கு அடுத்த படங்கள் கையில் இல்லை. அஜித் விவேகம் திரைப்படத்துக்குப் பிறகு அமைதியாகவே இருப்பதால், அவர் கையிலும் படங்கள் இல்லை. கமல் இப்போதைக்கு படம் எதிலும் கவனம் செலுத்துவதாக இல்லை. அதேசமயம் ரஜினியின் 2.0 ஜனவரி 26ஆம் தேதியைக் குறிவைத்திருக்கிறது என்பதால் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை 2018 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவெடுத்து வேலைகளைத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.

சூர்யாவைவிட கீர்த்தி சுரேஷுக்குத்தான் இந்த செய்தி மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். கிட்டத்தட்ட ஏழு படங்களைக் கையில் வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலன்று ரிலீஸானால் ஹாட்-ட்ரிக் வெற்றி கிடைக்கும். 2016இல் ரஜினி முருகன், 2017இல் பைரவா என இரண்டு வருட பொங்கலுக்கும் வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்துவரும் கீர்த்தி சுரேஷுக்கு இந்தப் படமும் வெற்றியாக அமைந்தால் அவரது வளர்ச்சியைத் தடுக்கவே முடியாது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon