மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

முருங்கைக்காய் பொரித்த குழம்பு - கிச்சன் கீர்த்தனா 07

முருங்கைக்காய் பொரித்த குழம்பு - கிச்சன் கீர்த்தனா 07

தேவையானவை:

பயத்தம் பருப்பு – அரை கப் (லேசாக வறுத்துக் கொள்ளவும்)

துவரம் பருப்பு – அரை கப்

இவைகளைத் தண்ணீர்விட்டுக் களைந்து 6 முருங்கைக் காய்களை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு மஞ்சள்பொடி, மூன்று கப் தண்ணீரும் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக வைத்து இறக்கவும்.

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் - 4

மிளகு - அரை டீஸ்பூன்

தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – முக்கால் கப்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

தக்காளி - 2 (நறுக்கிக் கொள்ளவும்)

தாளித்துக் கொட்ட: கடுகு, பெருங்காயம், ஒரு டீஸ்பூன் நெய், கொத்தமல்லி, கறி வேப்பிலை – தேவைக்கேற்ப

செய்முறை:

வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து தேங்காயையும் லேசாக வறுத்து ஆறிய பின் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தக்காளியையும் வதக்கி அரைப்பதில் சேர்த்து விடவும். காயும் பருப்புமாக வேக வைத்ததில் அரைத்த கலவையை கரைத்துச் சேர்த்து திட்டமாக உப்பையும் சேர்த்து நிதானமான தீயில் நன்றாகக் கொதிக்க விடவும். இறக்கி வைத்து நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து கொத்தமல்லி, கறி வேப்பிலை சேர்க்கவும். சின்ன வெங்காயத்தையும் வதக்கி சேர்க்கலாம். தக்காளி சேர்க்காமல் கடைசியில் இறக்கிய பிறகு வேண்டிய அளவிற்கு எலுமிச்சை சாற்றையும் கலந்து கொள்ளலாம். கெட்டியாக இல்லாமல் சற்றுத் தளர்வாக தயாரிப்பதாலும், புளி இல்லாது செய்வதாலும் பொரித்த குழம்பு என்று சொல்கிறோம். நீங்களாக மேலும் கூடுதலாக எதையாவது சேர்த்து (நன்றாக இருந்தால்) அதற்கு நீங்களே கூட ஒரு பெயரை வைக்கலாம்.

கீர்த்தனா தத்துவம்

‘தூங்கி விழுந்தா உயிரோட இருக்கோம்னு அர்த்தம்... விழுந்து தூங்கிட்டா போயிட்டோம்னு அர்த்தம்.’

கிச்சன் கீர்த்தனா 01

கிச்சன் கீர்த்தனா 02

கிச்சன் கீர்த்தனா 03

கிச்சன் கீர்த்தனா 04

கிச்சன் கீர்த்தனா 05

கிச்சன் கீர்த்தனா 06

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon