மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

ஆண்களுடன் செல்ஃபி எடுக்கும் பெண்!

ஆண்களுடன் செல்ஃபி எடுக்கும் பெண்!

பல ஆண்டுகளாக ஆண்களுடன் செல்ஃபி எடுத்து பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இதை அவர் ஓர் ஆய்வாகச் செய்துவந்துள்ளார்.

பொதுவாகப் பெண்கள் தனியாகச் சாலைகளில் நடந்து செல்லும்போதோ, பேருந்துகளில் பயணம் செய்யும்போதோ, சில ஆண்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள். இதை எதிர்கொண்டு பெண்கள் எவ்வாறு போராட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த பல ஆண்களுடன் செல்ஃபி எடுத்துவருகிறார்.

ஆம்ஸ்டிராமை சேர்ந்தவர் நோயா ஜான்ஸ்மா (20). வீதிகளில் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்யும் ஆண்களுடன் இவர் செல்ஃபி எடுப்பார். அதைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவர்களைப் பற்றிய விவரங்களையும் வெளியிடுவார். இதன் மூலம் பல பெண்களுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இவர் வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 45,000 பேர் பின்தொடர்கிறார்கள். இந்தப் பக்கத்துக்கு அவர் ‘டியர் கேட் காலர்ஸ்’ (dear cat callers) என்று பெயர்வைத்துள்ளார்.

பெண்களுக்கான இந்த வித்தியாசமான விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் நோயா ஜான்ஸ்மாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வெள்ளி, 6 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon