மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

தனுஷுக்குப் போட்டியாக கிருஷ்ணா!

தனுஷுக்குப் போட்டியாக கிருஷ்ணா!

‘மாரி’ படத்தின் முதல் பாகத்துக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்துக்கான நடிகர், நடிகைகள் தேர்வில் பிஸியாகி உள்ளார் படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன். இந்தப் படத்தின் வில்லன், நாயகி அறிவிப்பைத் தொடர்ந்து இதில் நடிக்கவுள்ள மற்றொரு நாயகன் அறிவிப்பை பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (அக்.6) மாலை அறிவித்துள்ளார்.

மாரி படத்தின் முதல் பாகத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்த விஜய் யேசுதாசுக்குப் பதிலாக, இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். இதில் அவர் நடிக்கவில்லை, அவருக்குப் பதிலாக வேறொருவர் நடிப்பார் என்று தகவல் வெளிவந்தது.

நிவேதா தாமஸ் அல்லது நிவேதா பெத்துராஜ் இவர்களில் ஒருவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் யாருமே யூகிக்க முடியாதவாறு சாய் பல்லவி நாயகியானார். அதே போலவே தற்போதும் யூகிக்க முடியாதவாறு, ஹீரோவாக பிஸியாக பல படங்களில் நடித்து வரும் கிருஷ்ணா தனுஷுக்குப் போட்டியாக இரண்டாவது நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரோபோ சங்கர் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. முதல் பாகத்துக்கு அனிருத்தின் இசை பக்க பலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

கிருஷ்ணா போஸ்டர்

வெள்ளி, 6 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon