மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

10.59 லட்சம் டன் நெல் கொள்முதல்!

10.59 லட்சம் டன் நெல் கொள்முதல்!

ஹரியானாவில் உள்ள மண்டிகளுக்கு 10.59 லட்சம் டன் அளவிலான நெல் கொள்முதலுக்கு வந்துள்ளது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில அரசு கூறியுள்ளதாவது: “இந்தக் கொள்முதல் சீசனுக்கு நெல்லைக் கொள்முதல் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மண்டிகளுக்குக் கொண்டுவந்துள்ளனர். இதுவரையில் 10.59 லட்சம் டன் நெல் வந்துள்ளது. இதில் ஏஜென்சிகள் மூலம் 10.43 லட்சம் டன் நெல்லும், மில்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலம் 16,042 டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதில், 5.06 லட்சம் டன் உணவு, சிவில் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையிடமிருந்தும், 3.54 லட்சம் டன் ஹெச்.ஏ.எஃப்.இ.டி. அமைப்பிடமிருந்தும், 93,993 டன் ஹரியானா அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷனிடமிருந்தும், 1.74 லட்சம் டன் அம்பாலா மாவட்டத்திலிருந்தும், 1.85 லட்சம் டன் கைதால் மற்றும் 2.64 லட்சம் டன் கர்னல் மாவட்டத்திலிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

மேலும், இந்தியா சுமார் 130 நாடுகளுக்கு பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஸ்மதி அரிசிக்கான விலை சரிந்ததால் இந்த ஆண்டு மேற்கொண்ட பகுதிகளில் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 7 சதவிகிதம் வரை உற்பத்தி சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 6 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon