மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

வாட்ஸ்அப் வடிவேலு - 23

வாட்ஸ்அப்  வடிவேலு - 23

Pls study just a one min

நீ ஒரு தமிழனா இருந்தா இதை ஷேர் பண்ணுங்க.

ரஜினி விஜய் தனுஷ் பட டீசர் பல லட்சம் தமிழர்களால் பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று 15,00,000 வாக்குகள் அளித்தால் தண்டனை வழங்க தயார் என்று ஐ.நா சபை கேட்கிறது.

இன்னும் ஒரே நாள் மட்டுமே மீதம் உள்ளது.

2,00,000 வாக்குகள் தேவை.

இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

உங்கள் காலில் விழுகிறோம்.

pls share pannunga unga groups ku

♻♻♻♻♻♻♻♻♻pls vote it🙏

அடேய்ய்ய்ய்... யாருக்கு ஷேர் பண்ணனும், எதுக்கு ஷேர் பண்ணனும், எதை ஷேர் பண்ணனும்னு கூட சொல்லாம என்னத்தடா ஷேர் பண்ணி இருக்கீங்க.

கொஞ்சமாச்சும் மனசாட்சி வேணாமா...

“தண்டனை வழங்க தயார் என்று ஐ.நா சபை கேட்கிறது”- ஹூம்ம் ‘தண்டனை வழங்க தயார் என்று ஐ.நா சபை சொல்கிறது’ – அப்படின்னுதான் வரணும்.

சரி, அதை விடு... எதுக்கு தண்டனை? என்னடா உனக்கு பிரச்னை?

நீ ஒரு தமிழனா இருந்தா ஷேர் பண்ணுன்னு தான் சொல்லணும். அதென்ன ஒருமையில ஆரம்பிச்சு பன்மையில முடிக்கிற... “நீ ஒரு தமிழனா இருந்தா இதை ஷேர் பண்ணுங்க”. திடீர்ன்னு மரியாதைக் குடுக்க தோணிடுச்சா?

மெசேஜின் ஆரம்பத்துல மெரட்டிபுட்டு கடைசியில கால்ல விழறேன்னு சொன்ன பார்த்தியா... உன்ன நான் பார்த்தே ஆகணும்டா...

கிரேசி கோபால்

வாட்ஸ்அப் வடிவேலு 1

வாட்ஸ்அப் வடிவேலு 2

வாட்ஸ்அப் வடிவேலு 3

வாட்ஸ்அப் வடிவேலு 4

வாட்ஸ்அப் வடிவேலு 5

வாட்ஸ்அப் வடிவேலு 6

வாட்ஸ்அப் வடிவேலு 8

வாட்ஸ்அப் வடிவேலு 9

வாட்ஸ்அப் வடிவேலு 10

வாட்ஸ்அப் வடிவேலு 11

வாட்ஸ்அப் வடிவேலு 12

வாட்ஸ்அப் வடிவேலு 13

வாட்ஸ்அப் வடிவேலு 14

வாட்ஸ்அப் வடிவேலு 15

வாட்ஸ்அப் வடிவேலு 16

வாட்ஸ்அப் வடிவேலு 17

வாட்ஸ்அப் வடிவேலு 18

வாட்ஸ்அப் வடிவேலு 19

வாட்ஸ்அப் வடிவேலு 20

வாட்ஸ்அப் வடிவேலு 21

வாட்ஸ்அப் வடிவேலு 22

வெள்ளி, 6 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon