மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

பரோல் நிபந்தனைகளில் உள் நோக்கம்!

பரோல் நிபந்தனைகளில் உள் நோக்கம்!

சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் பரோல் நிபந்தனைகள் உள் நோக்கம் கொண்டவை கண்டிக்கத் தக்கவை என்று கொங்கு நாடு இளைஞர் பேரவையின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு தெரிவித்துள்ளார்.

தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக அணியில் நின்று கடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றவர்கள். இவர்கள் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி அணிக்கு எதிராகவே கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அண்மையில் நாகப்பட்டினத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு அரசு விழாவை நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினரான தமிமுன் அன்சாரி புறக்கணித்தார். தொடர்ந்து கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் தமிழக முதல்வரே தமிமுன் அன்சாரியை தொடர்புகொண்டு, ‘விமர்சனம் பண்ணுங்க. வேண்டாம்னு சொல்லலை. ரொம்ப கடுமையா பண்ணாதீங்க’ என்று சொன்னதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில் இன்று நாமக்கல்லில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, ‘’சசிகலாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் பரோல் நிபந்தனைகள் உள் நோக்கம் கொண்டவை. தமிழக அரசின் அழுத்தத்தின் பேரில்தான் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இது கண்டிக்கத் தக்கது’’ என்றார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon