மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

ஜவுளித் துறையில் குவியும் அந்நிய முதலீடு!

ஜவுளித் துறையில் குவியும் அந்நிய முதலீடு!

இந்திய ஜவுளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற ஸ்மிருதி இரானி இதுகுறித்துப் பேசுகையில், “கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் இந்திய ஜவுளித் துறையில் அந்நிய முதலீட்டாளர்கள் மேற்கொண்ட முதலீடுகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. செயற்கை நூலிழை தயாரிப்புத் துறையை மேம்படுத்தும் வகையில், அத்துறையின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து ஆலோசனை வழங்க உள் அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அத்துறையினரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

செயற்கை நூலிழை தயாரிப்புத் துறையின் மேம்பாட்டுக்காக இந்த உள் அமைச்சரவைக் குழு முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. இத்துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கத் தேவையான சலுகைகள் அளிப்பது, குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்வது போன்றவை குறித்து இக்குழு ஆலோசிக்கும். ஸ்மிருதி இரானி பங்கேற்ற இந்தப் பொருளாதார மாநாட்டில் 35 நாடுகளைச் சேர்ந்த 650 தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் காலநிலை மாற்றம், உள்கட்டுமானம், பாலின வேறுபாடு, பணமதிப்பழிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon