மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

பத்து ஆண்டுகள் கழித்து ரஷ் ஹவர் 4!

பத்து ஆண்டுகள் கழித்து ரஷ் ஹவர் 4!

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ் ஹவர் 4 படத்தின் மூலம் ஜாக்கிசான் மற்றும் கிறிஸ் டக்கர் மீண்டும் கூட்டணி சேர்கின்றனர்.

ஆக்‌ஷன் படங்களில் நடித்து உலக சினிமா ரசிகர்களை தன்வசப்படுத்திய ஜாக்கிசான், ஹாலிவுட் நடிகர் கிறிஸ் டக்கர் ஆகியோர் இணைந்து நடித்திருந்த படம் 'ரஷ் ஹவர்'. 1998-ல் வெளியான இந்தப் படம் காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2001-ல் 'ரஷ் ஹவர் 2' , 2007-ல் 'ரஷ் ஹவர் 3' வெளியாகின. இப்படத்தின் அனைத்து பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையைக் கிளப்பின.

இந்நிலையில், 10 ஆண்டுகள் கழித்து 'ரஷ் ஹவுர் 4' உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாகத்திலும் ஜாக்கி, கிறிஸ் டக்கர் இணைந்து நடிக்கவுள்ளனர். இதுகுறித்து நடிகர் ஜாக்கிசான், "கடந்த 20 ஆண்டுகள் நான் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். நான் நடித்த `கராத்தே கிட்' படத்தின் பாத்திரம் ரசிகர்களைக் பெரிதும் கவர்ந்துள்ளது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான யோசனையும் உள்ளது. ஆனால் அதற்கான சரியான கதை அமையவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக ரஷ் ஹவர் 4 படத்துக்கான சரியான கதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தோம். தற்போது அதற்கான திரைக்கதை உருவாக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. கிறிஸ் டக்கர் தேதி உறுதி செய்யப்பட்டதும் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு பணிகள் தொடங்கிவிடும்" என்று கூறியுள்ளார்.

இப்படத்தின் முதல் மூன்று பாகங்களையும் பிரட் ராட்னர் இயக்கினார். ஆனால் இந்த பக்கத்தை யார் இயக்க உள்ளது என்ற எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை. பிரட் ராட்னர் கடைசியாக, 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஹெர்குலஸ்' படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon