மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

கோவா: வரி வருவாய் குறைந்தது!

கோவா: வரி வருவாய் குறைந்தது!

கோவாவில் ஜி.எஸ்.டிக்குப் பின்னர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இந்த வரிவிதிப்பில் முதல் மாதம் ரூ.92,283 கோடி வரி வசூல் செய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ரூ.90,669 கோடி வசூல் செய்யப்பட்டிருந்தது. இதில் கோவா மாநிலத்தின் வரி வருவாய் ஜி.எஸ்.டிக்கு முந்தைய அளவை விடச் சரிந்துள்ளது. வரி செலுத்தியோரின் விகிதம் 30 சதவிகிதம் சரிந்துள்ளது என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி கோவா மாநில அதிகாரிகள் தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "21,000 வர்த்தகர்கள் வரி செலுத்துவோர் பட்டியலில் உள்ளனர். ஆனால் அவர்களில் 70 சதவிகிதப் பேர் மட்டுமே வரி செலுத்தியுள்ளனர். 30 சதவிகிதப் பேர் வரி செலுத்தவில்லை. ஜூலை 1 முதல் இதுவரை ரூ.491.79 கோடி வரி வருவாயாக மாநில அரசு பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 22 சதவிகிதம் குறைவாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இதன் மதிப்பு 628.27 கோடியாக இருந்தது. அதாவது இந்த ஆண்டு ரூ.136.48 கோடி வரி வருவாய் குறைந்துள்ளது."

மொத்த வரி வருவாயில் பெட்ரோலியப் பொருட்கள் வாயிலான வரி வருவாய் ரூ.132.66 கோடி என்றும் கோவா அரசு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி வாயிலான வருவாய் நிலை பெற 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon