மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

நகை வாங்க ஆதார் கட்டாயமில்லை!

நகை வாங்க ஆதார் கட்டாயமில்லை!

ரூ.50,000 மற்றும் அதற்குமேல் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கி மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. பணச் சலவை தடுப்புச் சட்டம் 2002ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் நகை வர்த்தகம் பாதிக்கப்பட்டது. எனவே இந்தப் புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென நகை வியாபாரிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஆதார் எண்ணுக்குப் பதிலாக மற்ற அடையாள அட்டைகளையும் வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்தப் புதிய சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரத்தினம் மற்றும் நகைகள் கூட்டமைப்பின் தலைவர் நிதின் கண்டேல்வால் கூறுகையில், "கடந்த 20 நாட்களாக அரசுத் துறையின் ஒவ்வொரு பிரிவினரையும் தனித்தனியாகச் சந்தித்து மனு கொடுத்தோம். தற்போது அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பாராட்டக்கூடியதாகும். இந்நடவடிக்கையால் பண்டிகைக் கால விற்பனை சிறப்பாக நடக்கும்" என்று கூறியுள்ளார். நகை மற்றும் ரத்தின விற்பனையில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் முறையிட்டதால் ரூ.50,000க்கு மேல் நகை வாங்குவோருக்கு ஆதார் கட்டாயம் என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon