மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

சீன ஓபன்: அரையிறுதியில் சானியா ஜோடி!

சீன ஓபன்: அரையிறுதியில் சானியா ஜோடி!

சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - ஷுவாய் பெங் (சீனா) ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடைபெற்று வரும் சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (அக்டோபர் 6) நடைபெற்ற கால் இறுதி போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - பெங் ஜோடி, செக் குடியரசின் சினியகோவா - ஸ்டிரைகோவா ஜோடியுடன் மோதின. இதில் சானியா ஜோடி 4-6, 6-2, 10-7 என்ற செட் கணக்கில் சினியகோவா ஜோடியை வீழ்த்தியது. 1 மணி, 20 நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி போராடி வென்றது.

இன்று (அக்டோபர் 7) நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் சானியா ஜோடி சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்ஸ் - தைவானின் யங் ஜன் ஜோடியை எதிர்கொள்கிறது. ஆண்கள் ஒற்றையருக்கான அரையிறுதிப் போட்டிகளில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் - பல்கேரியாவின் திமித்ரோவ்வுடன் மோதவுள்ளார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் - ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் மோதவுள்ளனர்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon