மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

குப்பைகளால் சீர்குலையும் சுற்றுலா!

இந்தியா தூய்மையில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு புறம் குப்பைகளைக் குவித்துவைத்துவிட்டு, மறுபுறம், எங்கள் பாரம்பரியம் மகத்தானது என்று மார்தட்டிக்கொள்ள முடியாது என்று நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறியிருக்கிறார்.

டெல்லியில் நேற்று (அக். 06) நடைபெற்ற இந்தியப் பொருளாதார மாநாட்டில் சுற்றுலா குறித்த அமர்வில் பேசிய அவர், “சுற்றுலா என்பது நடத்தையில் உள்ள நாகரிகம்தான்.” என்று கூறினார்.

மாட்டிறைச்சியையும் மது பானத்தையும் கட்டுப்படுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், எதைச் சாப்பிட வேண்டும், எதைக் குடிக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளிடம் அரசு சொல்லிக்கொண்டிருந்தால் சுற்றுலாத் துறை பாதிக்கப்படும்

மது முதலான போதைப் பொருள்களை அருந்தும் பழக்கம் அதிகரித்துவருவது குறித்துப் பிரதமர் பேசியதற்கு அடுத்த நாள் நிதி ஆயோக்கின் தலைமை அதிகாரி இப்படிப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தவில்லை என்று சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) அல்ஃபோன்ஸ் கண்ணன்தானம் செப்டம்பரில் கூறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon