மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

ஜி.எஸ்.டி.: 27 பொருட்களுக்கு வரி குறைப்பு!

ஜி.எஸ்.டி.: 27 பொருட்களுக்கு வரி குறைப்பு!

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 27 பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், சேவைகள் சிலவற்றின் வரி விகிதங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலின் 22ஆவது கூட்டம் அக்டோபர் 6ஆம் தேதி (நேற்று) டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முக்கிய அம்சமாக ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கின் செயல்பாடுகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றியும், ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கில் இருக்கும் குறைபாடுகள், ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், வரிக் குறைப்பு தொடர்பாக எழுந்த பல்வேறு கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு 27 பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏ.சி. வசதியுடைய ஹோட்டல்களுக்கான சேவை வரியை 18 சதவிகிதத்திலிருந்து குறைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

நேற்றைய கூட்டத்தில் குறிப்பிடும்படியாக, உலர் மாம்பழம் 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும், பிராண்டு செய்யப்படாத ஆயுர்வேத மருந்துகள் 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும், மார்பிள் மற்றும் கிரானைட் தவிர்த்துப் பிற அச்சுக் கற்கள் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும், கிலிப் உள்ளிட்ட ஸ்டேசனரி பொருட்கள் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும், டீசல் என்ஜின் உபகரணங்கள் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும், பம்ப் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும், கையால் நூற்கப்பட்ட நூல் 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon