மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

நீதிமன்றத்தில் ஆஜரான ஜெய்

நீதிமன்றத்தில் ஆஜரான ஜெய்

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த மாதம் 21-ம் தேதி நடிகர் ஜெய், மது அருந்தி விட்டு, போதையில் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அவர் ஓட்டி வந்த கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் ஜெய் மீது வழக்கு தொடர்ந்தனர்.இதன் காரணமாக ஜெய் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இது தொர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஜெய், பிரேம்ஜி ஆகிய இருவரும் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவர் மீது தொடர்ந்த வழக்கில் ஜெய் நேற்று ஆஜராக வேண்டும் உததரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாததால் பிடி ஆணை பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இரண்டு நாட்களில் ஜெய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவால், இன்று (அக்.7) காலை ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். தற்போது இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon