மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

சமந்தா திருமணம்: மனதைக் கொள்ளையடிக்கும் புகைப்படங்கள்!

சமந்தா திருமணம்: மனதைக் கொள்ளையடிக்கும் புகைப்படங்கள்!

தென்னிந்திய சினிமாவின் செல்ல ஜோடியான சமந்தா - நாக சைதன்யா ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்துவிட்டனர். இந்து முறைப்படியான திருமணமும், அதற்கு முந்தைய மெஹந்தி நிகழ்ச்சிகளும் முடிவடைந்துவிட்டன. அந்நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட சமந்தா - சைதன்யாவின் படங்கள்தான் இப்போது இணையதளத்தில் ஊடுருவிய வைரஸ் போல வேகமாகப் பரவிவருகின்றன.

சமந்தாவின் திருமண நிகழ்வு கோவாவில் கலாட்டாவாக நடைபெற்றாலும், அவரது திருமண வரவேற்பின்மீது தான் அனைவரது கவனமும் இருக்கிறது. இவ்விழாவுக்கு பலரும் வருவார்கள் என்பதால், அது பற்றிய தகவல்களை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். ஆனால், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்து கோடி செலவில் திருமண வரவேற்பு நடைபெறவிருப்பதாக செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இணையதளத்தின் பல்வேறு இடங்களிலும் இருக்கும் சமந்தா திருமணப் படங்களின் தொகுப்பு கீழே...

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon