மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

பாலாஜி சக்திவேல் தேர்ந்தெடுத்த அடுத்த ஹீரோயின்!

பாலாஜி சக்திவேல் தேர்ந்தெடுத்த அடுத்த ஹீரோயின்!

பாரதி ராஜாவின் அன்னக்கொடி படத்தின் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானாலும், விஜய் மில்டனின் கடுகு படத்தின் மூலம் கவனம் பெற்றவர் சுபிக்ஷா. நேத்ரா, சீமத்தண்ணி, கோலிசோடா 2, வேட்டை நாய் எனப் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், தற்போது பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘யார் இவர்கள்’ படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

காதல், வழக்கு எண் 18/9 உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். இதனையடுத்து லிங்குசாமி தயாரிப்பில் ‘ரா.. ரா.. ராஜசேகர்’ என்ற படத்தை இயக்கினார். ஆனால் லிங்குசாமிக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் அந்த படம் பாதியில் நின்று விட்டது. இந்நிலையில் விஜய் மில்டனின் `ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் யார் இவர்கள் படத்தை இயக்கி வருகிறார்.

மாநகரம் படத்திற்கு இசையமைத்த ஜாவேத் ரியாஸ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் படக் குழுவினர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon