மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

ஸ்மார்ட் கார்டில் ஆணுக்குப் பதில் பெண்!

ஸ்மார்ட் கார்டில் ஆணுக்குப் பதில் பெண்!

புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுவரும் நிலையில் தற்போது ஆணுக்குப் பதில் பெண் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தும் குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது. ஆனால் புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. குடும்பத் தலைவர் புகைப்படத்துக்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால், செருப்பு, விநாயகர், தேசியக் கொடி ஆகிய படங்கள் அச்சிடப்பட்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அது தவிர தம்மம்பட்டி உள்ளிட்ட சில கிராம மக்களின் ஸ்மார்ட் கார்டுகளில் முகவரியும் தவறாக இருந்துள்ளது. இது போன்ற தவறுகளால் ஸ்மார்ட் கார்டை எந்த வித நலத் திட்டத்திற்கும் பயன்படுத்த முடியவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் புதுபத்தூரை சேர்ந்தவர் முருகையன் (70). இவரது மனைவி எழாம்பால். இவர்களுக்கு ரவிச்சந்திரன் என்ற மகன் உள்ளார். சமீபத்தில் இவருக்கு வழங்கிய ஸ்மார்ட் கார்டில் அவருடைய புகைப்படத்திற்குப் பதிலாக ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்துள்ளது. இந்த அட்டையை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“புகைப்படத்தை மாற்றினால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்று நியாய விலைக் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தவறான ஸ்மார்ட் கார்டுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டை மாற்றித் தருமாறு வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினால் புகைப்படத்தை மாற்றுவதில் சிக்கல் ஏற்படுவதாக அலைக்கழிக்கிறார்கள். வயது முதிர்வால் என்னால் அலையவும் முடியவில்லை. தீபாவளி வரவிருப்பதால் இலவச பொருட்களையும் வாங்க முடியவில்லை. எனவே ஸ்மார்ட் கார்டை உடனே மாற்றித் தர வேண்டும்” என்று முருகையன் வேதனையுடன் கூறினார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon