மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

சின்னம் கிடைத்த பிறகு நடவடிக்கை: மைத்ரேயன்

சின்னம் கிடைத்த பிறகு நடவடிக்கை: மைத்ரேயன்

தேர்தல் ஆணையத்தில் சின்னம் எங்கள் தரப்புக்கு வழங்கப்பட்ட பிறகு, கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒருங்கிணைந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

புதிய ஆளுநராக நேற்று பதவியேற்றுக்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று (அக்டோபர் 7) அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். ஆளுநருக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், "சசிகலாவுக்குத் தனிப்பட்ட காரணங்களுக்காக பரோல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. சசிகலா பரோலில் வெளிவந்துள்ளதால் தமிழகத்தில் எவ்வித அரசியல் மாற்றமும் ஏற்படாது.

இரட்டை இலை விவகாரத்தில் நேற்று எங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தோம். வரும் வெள்ளியன்று தினகரன் தரப்பில் வாதம் நடைபெறும். அதன்பிறகு ஏதேனும் விவரம் வேண்டுமென்றால் அது குறித்து கேட்டு தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும். தேவைப்பட்டால் மற்றொரு முறை விசாரணை தள்ளிவைக்கப்படலாம். உண்மையான அதிமுக யார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து சின்னம் கிடைத்த பிறகு, கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடமையாக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் உள்ளன என்பதை மருத்துவர் என்ற முறையில் நான் ஒத்துக்கொள்கிறேன். டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் வருந்தத்தக்கதுதான். ஆனால் அவை தமிழக அரசால்தான் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon