மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

மெர்சல்: அனைத்துக்கும் தயார்!

மெர்சல்:  அனைத்துக்கும் தயார்!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 61ஆவது படம் 'மெர்சல்'. அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தீபாவளிக்கு இப்படம் வெளியாக உள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக 'மெர்சல்' தலைப்பைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கினால் அப்பெயரைப் பயன்படுத்தாமல் இருந்தது படக்குழு. நேற்று அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இது படக்குழுவினரை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளக்கியது. இதனைத் தொடர்ந்து மெர்சல் படச் சான்றிதழ் குறித்த செய்தியை உடனே வெளியிட்டு ரசிகர்களுடன் தங்களுடைய பூரிப்பைப் பகிர்ந்துகொண்டனர். அதேபோல, தற்போது தமிழ் சினிமாவில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையினாலும், கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட குழப்பங்களினாலும் எப்போது வேண்டுமென்றாலும் திரையுலகம் ஸ்டிரைக் அறிவிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், எந்த நிலையிலும் படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் விஜய்யும், தேனாண்டாள் நிறுவனமும் உறுதியாக இருக்கின்றனர்.

விஜய்யின் முந்தைய படங்களை விட அதிகப் பொருட்செலவில் உருவாகியுள்ளதால், இதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் அதிகமானோர் பார்த்த வீடியோ என்ற சாதனையை படைத்தது. இந்நிலையில் தணிக்கைச் சான்றிதழ் பெற 'மெர்சல்' படக்குழு விண்ணப்பித்தது. இதில் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை இயக்குநர் அட்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon