மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

திறப்பதற்கு முன்பே கீழிறங்கிய பாலம்!

திறப்பதற்கு முன்பே கீழிறங்கிய பாலம்!

நாமக்கல்லில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாலம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே அரை அடி கீழே இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் மணிமுத்தாற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்றுவந்தது. இந்தப் பாலத்தை வரும் 16ஆம் தேதி முதலவர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார். இதையடுத்து அவசர கதியில் பாலம் கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்குத் தயாராக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கன மழை காரணமாகப் பாலத்தின் தார் இணைப்புப் பகுதி சுமார் அரை அடி வரை கீழே இறங்கியுள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலத்தின் தரத்தைப் பற்றிச் சிந்திக்காமல் அவசர கதியில் திறக்காக முயன்றதே இதற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 2 நாள் மழைக்கே தாக்குப்பிடிக்காத பாலம் எப்படித் தொடர் மழையைச் சமாளிக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கீழிறங்கிய பாலத்தைச் சரி செய்யும் பணிகள் நடைபெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon