மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சினிமா பாக்க லோன் கிடைக்குமா? - அப்டேட் குமாரு

சினிமா பாக்க லோன் கிடைக்குமா? - அப்டேட் குமாரு

கமல் நாட்டுக்குத் தேவைன்னு கிளம்பி வர்றார். ஆனா, அங்க சினிமாவை அழிக்குறதுக்கு எல்லா வேலையும் பண்ணிட்டாங்க. யாரோ ஒரு முரட்டு பீஸு, பாஸ் சினிமா இருந்தாதான பாப்புலராகி அரசியலுக்கு வருவாங்க. நாம அந்த சினிமாவையே அழிச்சிடலாம்ல அப்படின்னு ஐடியா கொடுத்திருப்பாங்க போல. கமல் அதுக்கும் டிடிஎச்-ன்னு ஒரு மேட்டரை ஆல்ரெடி வெச்சிட்டாரு. அதை ஃபாலோ பண்ணா போதும். ஆனா. அதை செய்யாம கமல் அரசியலுக்குப் போகலைன்னா இதெல்லாம் நடந்துருக்காதுன்னு ஒரு கும்பல் கெளம்பும். ஐயா, நீங்களே படம் பாக்குறதுக்கு பேங்க்ல லோன் வாங்கிக் குடுத்துட்டீங்கன்னா நாங்க சினிமா பாத்து உயிர் வாழ்ந்துக்குவோம்.

Jayaraj Pandiyan

மாஸ்டர் பிளான் புரியுதா?

டிக்கெட் கட்டணத்த அதிகமாக்கீட்டா படம் ஓடாது, படம் ஓடலைன்னா சினிமா நடிகர்கள் பிரபலமாக முடியாது, பிரபலமாகலைன்னா அரசியலுக்கு வருவேன்னு டயலாக் பேச முடியாது!

வைச்சான் பாரு ஆப்ப!!!

Sharmila Rajasekar

170 ரூவாய்க்கு விதம் விதமா எல்லா மொழியிலேயும் 100 சானல் வந்துகிட்டு இருந்துச்சு ..

பரமார்த்தகுரு சிஎம் 75 ரூவாய்க்குன்னு அரசு கேபிள்'ன்னு சொல்லி அறிவிச்சாங்க ..

120 ரூவாக்கு லோக்கல் கேபிள் ஆபரேட்டர் வசூல் பண்ணாங்க .

ஆனா, இப்போ இலவச செட்டாப் பாக்ஸ்ன்னு சொல்லி கவர்ன்மென்ட் சொல்லுது ..ஆனா 700 ரூவா கட்டணுமாம்.. மாதம் 200 ரூவா கேபிள் கட்டணமாம்..!!

அட மம்மி ... ஒண்ணு கூட உருப்படியா பண்ணலையே ... என்னா சொல்றது ..!!!

Hariharan Venkatraman

கடந்த எட்டு வருடங்களில் பால் விலை அதிகமாகியிருக்கிறது. அரிசி விலை அதிகமாகியிருக்கிறது. தங்கம் விலை அதிகமாகியிருக்கிறது. பள்ளிக்கூட கட்டணங்கள் அதிகமாகியிருக்கிறது.

திரை அரங்க நுழைவுக்கட்டணம் தமிழ்நாட்டில் மட்டும் அதிகரிக்கவே இல்லை. செயற்கையாகக் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது ஏன்?

Saba Sabastin Sabas

தியேட்டர் போயி படம் பாக்க பேங்ல லோன் வாங்கனும் போலயே.....

Kanmani Pandian

தியேட்டர்ல போய் படம் பாக்கற அளவுக்கெல்லாம் வசதி இல்லைங்க..

Danny

தூங்குறது மட்டுமில்லீங்க..

பணியிடத்துல வேலை முடிஞ்சதும்..

இஷ்டமான வேறொரு வேலைய எடுத்துப் போட்டு செய்றதும் ஒரு ரிலாக்ஸ் தாங்க..

இப்படியெல்லாம் தேத்திக்க தெரியணும்ங்க

M.s. Jacob Nellai

தியேட்டர்ல டிக்கெட் விலையை கூட்டினாலும் இன்டர்நெட் விலை குறைய தான் செய்யும்.

நீங்க எப்படி பால் போட்டாலும் சிக்சர் தான்

Sayed Buhari

காந்தியை கொன்ற நான்கு குண்டுகளில் கோட்சே துப்பாக்கியில் இருந்தது மூன்று குண்டுகள்தான் -செய்தி.

அப்ப,நான்காவது குண்டு ஹேராமில் கமல் சுட்டதா இருந்திருக்கும்.

செல்லூர் பாசறைகள்.

அனிதா

பிக்பாஸ் 2வது வந்த எனக்கு எந்த பரிசுதொகையும் வழங்கப்படவில்லை - சினேகன்

பிக்பாஸ்: நமீதா, ஓவியா, ஜூலிய ஓசில கட்டிபுடிச்சதுக்கு சரியா போச்சு

நா. சரத்குமார்

டோலி நீங்க அழகா இருக்கீங்க அதனால உங்க போட்டோ மட்டும் வையுங்களேன் ஏன் உங்க புருசர் கெடா மீசை போட்டோவலாம் சேத்து வைக்குறீங்க இட்ஸ் அனோயிங் டோலி

Umamaheshvaran Panneerselvam

ஸ்டாலின் கட்டிய பாலங்களால் தான் கொசு அதிகரித்துவிட்டது என்று சொன்ன நமது நகரத்தந்தை அண்ணன் சைதை துரைசாமியாரை இந்த நேரத்தில் நினைத்துக் கொள்கிறேன்.

Dinesh Kumar Chengai

Breaking news கிடைக்கலனா அமைதியா இருங்க ஜெய்க்கு லைசன்ஸ் ரத்து பண்ணத breaking news ல போட்டு சாவடிக்காதீங்க😬😬

நியூஸ் சேனல் பரிதாபங்கள்

Jaya Prabha

அன்னிக்கே ஆண்டவரு சொன்னாரு, படத்த வூட்லயே நல்ல ப்ரிண்ட்ல ரிலீஸ் பண்றேன்னு.. எவன் கேட்டான்..

அந்த நாஸ்ட்ரடாமஸ் சொல்றதுதான் நடக்கப்போகுது..

ஆஃப்டர் ஆல் கலிலியோவயே கல்லால அடிச்ச ஒலகம்தானேயா இது..

இனிமே சினிமால்லாம் தமிழ் ராக்கர்ஸ்தான்.

என்ன அண்ணன் விஷால்தான் காண்டாவாரு

Ersath Mohamed

உண்மையாகவே தமிழ் சினிமா காரர்கள் கலைத்துறையை சார்ந்தவர்கள்தானா என்ற சந்தேகமே எழுகிறது.

ஏனென்றால் இங்கு நடக்கும் நாடகம் யாவுமே கலையை அழிக்கும் முயற்சி தான்.

Prabhakaran Balakrishnan

டெங்கு காய்ச்சல் உயிரிழப்புக்கு அரசு மட்டுமே காரணம் அல்ல: மைத்ரேயன்

ஆமாம் ஏடிஸ் கொசுக்களும் தான் காரணம்

Seenu Ramasamy (@seenuramasamy):

தியேட்டர் கட்டணஉயர்வால் ஏழை நடுத்தரமக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகிவிட்டது.

இதனால் நியாயமாக பார்க்கமுடியாத மக்களால் சினிமாத்தொழில் அழியநேரும்

Umamaheshvaran Panneerselvam

என் தூரத்து உறவினர் இன்று காலை நாகர்கோவிலில் டெங்குவிற்கு பலியாகியுள்ளார்.

அதிமுக அரசுக்கு என் வணக்கங்கள்.

Bala Salem

ஆசையா ஐஸ்க்ரீம் தின்னோம் 18% ஜி எஸ் டி பிடுங்கிட்டானுங்க...

இனி ஐஸ்க்ரீம் எல்லாம் கூகுள்லதான் பார்க்கோனும்

கா. விஜய் ஆனந்த்

“நமக்கு கல்யாணம் முடிஞ்சி இத்தன வருஷம் ஆகிடிச்சி.. ஒரு தடவயாச்சும் ஊட்டிக்கி கூட்டிட்டு போயிருக்கீங்களா.. ஒங்கள கட்டிக்கிட்டு.. ம்ம்ம்.. எந் தலவிதி அப்டி..”

= இந்ததடவ வெக்கேஷன் வாறப்போ ஒன்ன கண்டிப்பா கூட்டிட்டு போறேன்டி செல்லம்..

“கிழிச்சீங்க.. எனக்கு லாங்ட்ராவல் ஒத்துக்காது , அதுவும் மலயில ட்ராவல்னா தலசுத்தி வாமிட் எடுத்துடுவேன்னு தெரிஞ்சே சொல்லுதீங்களே..”

= சரி.. மதுர அதிசயம் தீம் பார்க்குக்கு போலாமா..?

“எதுக்கு..? ஜெயண்ட்வீல்ல ஏத்தி விட்டு என்ன கொல்லப் பாக்குறீங்களாக்கும்..? தாலிச்செயினு பழய மாடலாகிடிச்சி.. புதுச்செயினு மாத்தி தாங்கன்னு எத்தன தடவ கேட்ருக்கேன்..?”

= லீவ் சேலரி கெடச்சதும் அந்தப் பணத்துல கண்டிப்பா வேற செயின் மாத்திடலாம்டா.. கோச்சுக்காத..

“லூஸு மாதிரி பேசாதீங்க.. வீட்டு லோனு பாக்கி இருக்கு.. அத யாரு அடப்பாங்க..? நானென்ன ஒவ்வொருத்தி மாதிரியும் மாசத்துக்கு நாலு சேல எடுத்தும் பியூட்டி பார்லரும்னா ஒங்க காச வீணாக்குறேன்..? ”

= நா அப்டி சொல்லவே இல்லியேம்மா.. ஊருக்கு வந்ததும் போத்தீஸ் போறோம்.. ஏழெட்டு சேலைகள் எடுக்குறோம்.. இப்ப சந்தோஷமா..?

“க்க்கும்.. அந்தப் பணத்துக்கு புள்ளைகளோட ஸ்கூல் ஃபீஸ கட்டிட்டுப் போகலாம்.. துட்ட எதுக்கு வீணா செலவாக்கணும்.. வாழ்க்கையில ஒரு ஆசா பாசம் , நிம்மதியே இல்லாமப் போச்சி..”

= (பரிதாபமா) இப்போ நா என்னதான் பண்ணனும்னு சொல்லும்மா..

“ஊட்டிக்கி என்ன கூட்டிட்டுப் போவீங்களா.. மாட்டீங்களா..? ”

= மறுடியும் மொதல்ல இருந்தாஆஆஆ...

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon