மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

திருமுருகன் காந்தி கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு!

திருமுருகன் காந்தி கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு!

மே 17 இயக்கத்தின் சார்பில் புதுச்சேரியில் இன்று நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்திற்கு, அம்மாநில காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

கடந்த மே மாதம் சென்னை மெரினா கடற்கரையில், மே 17 இயக்கத்தின் சார்பில் இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்கள் இனப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிக்குக் காவல் துறை தடை விதித்ததைத் தொடர்ந்து, தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் உள்ளிட்ட நால்வர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.

குண்டர் சட்டத்திலிருந்து சமீபத்தில் விடுதலையான திருமுருகன் காந்தி, இலங்கைத் துணைத் தூதரகம் முன்பு வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்குக் கண்டணம் தெரிவித்து நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, சாலையில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். அன்று மாலையிலேயே விடுதலை செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில்,புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே, மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் இன்று (அக்டோபர் 7) பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொதுக்கூட்டத்துக்கு புதுச்சேரி காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம்ஒ ழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அனுமதி மறுக்கப்பட்டதாகக் காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon