மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

வங்கி எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டம்!

வங்கி எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டம்!

இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, 10 முதல் 15 வங்கிகள் வரையில் மட்டுமே செயல்பாட்டில் வைத்திருக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் வங்கித் துறையில் வாராக் கடன் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடன் பிரச்னை அதிகரிப்பதால் வங்கிச் செயல்பாடுகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பொதுத்துறை வங்கிகளை இணைத்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் ஐந்து துணை வங்கிகளையும் பாரத மகிளா வங்கியையும் மத்திய அரசு இணைத்தது. இதன் மூலம் சர்வதேச அளவில் மிகப்பெரிய 50 வங்கிகளுக்குள் ஒன்றாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உருவெடுத்தது. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை இணைவுப் பணி மூலம் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதித்துறையின் முதன்மைப் பொருளாதார ஆலோசகரான சஞ்சீவ் சன்யால் கூறுகையில், “வாராக் கடன்களை வசூலிப்பது தொடர்பான திட்டங்கள் சரியாக வகுக்கப்பட்டவுடன் வங்கிகள் இணைப்புப் பணி தொடங்கும். தற்போது இந்தியாவில் 21 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இவற்றை 10 முதல் 15 வரையில் குறைக்க வேண்டும். இதற்கு மேலும் குறைக்க இயலாது. ஏனெனில் நான்கு முதல் 5 வங்கிகள் மட்டுமே இருந்தால் வங்கிச் சேவைகளில் பாதிப்பு ஏற்படும். வங்கிகளுக்கான வாரக் கடன், பணியாளர் மாற்றத்துக்கான சூழல்கள் உள்ளிட்டவற்றைப் பொறுத்தே வங்கிகள் இணைவு இருக்கும்” என்றார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon