மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை!

பொறியியல் படிப்புகளுக்கு  நுழைவுத் தேர்வு இல்லை!

பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு இல்லை என்று அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே நெற்று (அக்டோபர் 6) அறிவித்துள்ளார்.

பொறியியல் கல்லூரிகளின் தரம், மதிப்பீடு, அங்கீகாரம் வழங்குவதில் உள்ள சிக்கல் உள்ளிட்டவை குறித்த ஒருநாள் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது.

கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏஐசிடிஇ தலைவர் அனில் தத்தாத்ரேயா, “மருத்துவச் சேர்க்கைக்கு நீட் தேர்வு கொண்டுவந்ததைப் போல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு கொண்டுவரும் திட்டம் ஏஐசிடிஇக்கு உள்ளது. ஆனால், மருத்துவப் படிப்புக்கு நடத்திய நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள நிறை, குறைகளை ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னரே பொறியியல் நீட் தேர்வு குறித்து முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளை மூடுவதற்குக் கடந்த மாதம் ஆலோசிக்கப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என இரண்டையும் சேர்த்து ஒரு கல்லூரியில் ஒரு பாடப் பிரிவில் எவ்வளவு பேரைச் சேர்க்க வேண்டும் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோ அந்த அளவில் மட்டுமே மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும். அப்படி அல்லாமல் 50% இடங்கள் காலியாக இருந்தால் அந்த கல்லூரிகள் குறித்து ஆய்வு செய்யப்படும். 5 ஆண்டுகள் வரை 50% இடங்கள் காலியாகவே இயங்கும் நிலை நீடித்தால் அந்தக் கல்லூரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“கல்லூரிகளை மூடாமல், இரண்டு, மூன்று கல்லூரிகளை இணைத்து, ஒரே கல்லூரியாக்க அல்லது கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்ற அனுமதி அளிக்க உள்ளோம். தேசிய தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெறும் பொறியியல் கல்வி நிறுவனங்கள், சர்வதேசத் தரப் பட்டியலில் முன்னிலை பெறுவதில்லை. இந்த நிலையை மாற்றக் கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்” எனவும் அனில் தத்தாத்ரேயா கூறியுள்ளார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon