மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

சகோதரச் சண்டையால் இழப்பு தமிழகத்துக்கே: தா.பாண்டியன்

சகோதரச் சண்டையால் இழப்பு தமிழகத்துக்கே: தா.பாண்டியன்

அதிமுகவில் நடைபெறும் சகோதரச் சண்டையால் தமிழகம் பின்னோக்கி செல்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் அணிகள் இணைந்த பிறகு, தினகரன் ஒரு அணியாகவும், முதல்வர் எடப்பாடி தனி அணியாகவும் செயல்படுகின்றனர். முதல்வர் எந்த பொதுக்கூட்டத்தில் பேசினாலும்,"கட்சியையும், ஆட்சியையும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது எனவும், தினகரன் தரப்புக்கு எதிராகவுமே பேசிவருகிறார். தினகரன் தரப்போ," எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக விமர்சனம் செய்து வருவதோடு, இன்னும் சில நாட்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும், ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் வீட்டுக்குச் சென்றுவிடுவர் என்றும் பேசிவருகிறார்.

இந்தச் சூழ்நிலையில் எம்ஜிஆர் காலந்தொட்டே அதிமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்துவருபவரும், ஆளுநர் உள்பட அனைத்து தலைவர்களும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்தோம் என்று கூற, அந்த நேரத்தில் "ஜெயலலிதாவைப் பார்த்தவர்களைப் பார்த்துவிட்டு வந்தோம்" என்று கூறிய ஒரே அரசியல் தலைவருமான இந்திய கம்யூன்ஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பாண்டியனின் கருத்து கவனிக்க வைப்பதாக உள்ளது.

இன்று (அக்டோபர் 7) சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்த தா.பாண்டியன், அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது," அதிமுகவில் நடைபெற்றுவரும் சகோதரச் சண்டையால் தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது. மாநில அரசாங்கங்களுக்குத் தனி அதிகாரம் கொடுத்து அதன் வளர்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும்" என்று தெரிவித்தார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon