மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

ஃபேஸ்புக்: பாஸ்வேர்டு வேண்டாம் முகம் போதும்!

ஃபேஸ்புக்: பாஸ்வேர்டு வேண்டாம் முகம் போதும்!

ஃபேஸ்புக் 2004ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மார்க் ஜூகர்பெர்க், சாவரின், மெக்கோலம், ஹுக்ஸ், டுஸ்டின் என்பவர்களால் தொடங்கப்பட்டது. முதலில் ஹாவர்ட் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்தச் சேவையை 2006ஆம் ஆண்டு முதல் மற்ற கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு வழங்கியது. நாளடைவில் இது உலகம் முழுதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களைப் பார்ப்பதே மிகவும் ஆரிதாகிவிட்டது.

ஃபேஸ்புக் லாக்-இன் செய்ய யூசர் நேம் எனப்படும் மின்னஞ்சல் முகவரியுடன் பாஸ்வேர்டு மட்டுமே போதுமானதாக இருந்தது. திடீரென ஃபேஸ்புக்கில் லாக்-இன் செய்யும்போது பாஸ்வேர்டு மறந்துவிட்டால் என்ன செய்வது? பாஸ்வேர்டை மீட்டெடுக்க பல வழிகள் இருந்தாலும் தற்போது ஒரு புதிய வசதியை ஃபேஸ்புக் வழங்கவுள்ளது. இனிமேல் ஃபேஸ்புக்கை ஓப்பன் செய்ய பாஸ்வேர்டு தேவையில்லை. ஃபேஷியல் மூலமே இனிமேல் ஒப்பன் செய்யலாம் என்பதே அந்த புதிய வசதி.

தற்போது ஃபேஷியல் மூலம் ஃபேஸ்புக் அக்கவுண்டை ஒப்பன் செய்யும் வசதி, சோதனை அடிப்படையில் ஒரு சில இடங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் நிறை, குறைகளைக் கண்டறிந்து விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு காரணமாக இதில் உங்களுடைய புகைப்படத்தை ஸ்கேன் செய்து ஓப்பன் செய்யும் வசதி கிடையாது. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேமிராவை உங்கள் முகத்திற்கு நேராக வைத்து ஸ்கேன் செய்தால், ஃபேஷியல் டெக்னாலஜி உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து ஏற்கனவே நீங்கள் உங்கள் அக்கவுண்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உங்கள் புகைப்படம் அல்லது வீடியோவுடன் ஒப்பிட்டுச் சரியாக இருந்தால் உங்கள் அக்கவுண்ட் ஓப்பன் ஆகும். சில மாதங்கள் முன்பு ஃபேஸ்புக்கில் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் உங்களது நண்பர்கள் சிலரது புகைப்படத்தைக் கொடுத்து கண்டறியச்சொல்லும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon