மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

ராகுல் காந்தி தலைவராக மன்மோகன் சிங் ஆதரவு!

ராகுல் காந்தி தலைவராக மன்மோகன் சிங் ஆதரவு!

காங்கிரஸ் துணைத் தலைவராக இப்போது பதவி வகிக்கும் ராகுல் காந்தி, கட்சியின் தலைவராக வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதேபோல இந்தியாவில் பல மாநிலங்களிலும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆக வேண்டும் என்று குரல்கள் எழுந்துவருகின்றன.

டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் இன்று (அக்டோபர் 7) டெல்லியில் நடந்தது. 280 உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், ‘துணைத் தலைவர் ராகுல் காந்தியை விரைவில் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்துகொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல்கள் இந்தியா முழுதும் நடந்து வருகின்றன. டிசம்பர் மாத இறுதிக்குள் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை இறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் தங்கள் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களைக் கூட்டிப் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து மத்திய கமிட்டிக்கு அனுப்பிவருகின்றன. இந்த மாத இறுதிக்குள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடி, புதிய தலைவராக ராகுல் காந்தியைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon