மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

இந்தியாவில் துப்பாக்கி ஏந்தும் குழந்தைகள்!

இந்தியாவில் துப்பாக்கி ஏந்தும் குழந்தைகள்!

பொதுவாகத் தீவிரவாத அமைப்புகள் குழந்தைகளைப் பயன்படுத்துவதும் குழந்தைகள் துப்பாக்கி ஏந்துவதும் உலகெங்கும் அதிகரித்துவருகிறது. இது இந்தியாவிலும் அதிகரித்துள்ளதுதான் அதிர்ச்சியான செய்தி. இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் இச்செயல் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டும் வகையில் ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்தியப் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சண்டையில், குழந்தைகளை மாவோயிஸ்ட்டுகள் பயன்படுத்தி வருகிறார்கள் என்று ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்ரெஸ் கூறியுள்ளார்.

குழந்தைகள் ஆயுதங்கள் ஏந்துவது தொடர்பான அறிக்கையை ஐ.நா., பொதுச் செயலர் நேற்று (6.10.2017) வெளியிட்டார். “இந்திய அரசுக்கு எதிரான சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பினர் குழந்தைகளைப் பயன்படுத்திவருகின்றனர். பாடப் புத்தகங்களை ஏந்தும் வயதில் குழந்தைகள் துப்பாக்கி ஏந்தும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை ஐ.நா.வுக்கு ஆதாரத்தோடு கிடைத்துள்ளது. இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர் போன்ற வடமாநிலங்களில் நடக்கும் மோதலால், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். காஷ்மீரில் பதற்றம் ஏற்படும்போதும் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இந்திய அரசின் அறிக்கைப்படி, காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 30 பள்ளிகளுக்குத் தீவைத்தனர். நான்கு பள்ளிகளை ராணுவப் பயன்பாட்டுக்காகப் பாதுகாப்பு படையினர் பல வாரங்கள் பயன்படுத்திக்கொண்டனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிறது. இது குறித்து இந்திய அரசு விரைந்து குந்தைகள் நலம் காக்கும் முடிவை எடுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon