மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

பட்டணத்தில் பனை வைத்த மேயர்!

 பட்டணத்தில் பனை வைத்த மேயர்!

விளம்பரம்

பனை என்பது தமிழனின் அடையாளம்... தமிழனின் அடையாளம் என்று சொல்வதும் மனிதனின் அடையாளம் என்று சொல்வதும் ஒன்றுதான். ஏனென்றால் உலகின் மிகப் பழமையான மரம் பனை மரம். உலகின் மிகப் பழமையான இனம் தமிழினம்.

பனை மரங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் நிச்சயமாக மனித இனம் இருக்கும் என்பது விஞ்ஞானத்தின் தாமதமான கண்டுபிடிப்பு. பனை ஓலையிலேயே பனையைப் பற்றி எழுதி வைத்த அற்புதமான இனம் தமிழ் இனம். பனை மரம் தமிழினத்தின் தாய்மரம்.

நமது முன்னோர்கள் எழுதி வைத்த அற்புதமான இலக்கிய பொக்கிஷங்கள் எல்லாம் எழுத்தாணியால் பனை ஓலையில் எழுதப்பட்டன. தாலி என்று இன்று நாம் வரையறுக்கும் மங்கல நாண் என்பது பனை ஓலையில் எழுதி கட்டப்பட்டதால்தான் அதற்கு தாலி என்று பெயர் வந்தது. தால் என்றால் பனை.

ராஜராஜ சோழனின் பீரங்கிப் படை எது தெரியுமா? மிக மிக உயரமான முதிர்ந்த பனை மரங்களை வெட்டி ( வெட்டி என்றால் அப்போது ராணுவ பீரங்கிகளுக்காகவே பனை மரங்களை தனியாக வளர்த்தார்கள். ஒரு பனை வெட்டினால் ஆயிரம் பனை நட்டு வளர்த்தார்கள் மன்னர்கள்) அந்த பனையின் முனையில் துணிகளை அதிக அளவு சுற்றி அதில் தீமூட்டி எறிவார்கள். அது விழும் இடம் எரிந்து சாம்பல் ஆகும். இதை நாம் இலக்கியங்களில் தரிசிக்க முடிகிறது.

இப்படி தமிழனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது பனை. ஆனால் இன்று அந்த பனை மரம் எங்கே?

கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம் என்று சுற்றுச் சூழல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன.

மண் அரிப்பினை தடுத்து, நீர்வழித்தடத்தை பாதுகாக்கும், மருத்துவ குணம் கொண்ட பனை இந்தியாவின் தேசிய மரமாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய அனைத்து கிராமங்களிலும் மருத்துவகுணமிக்க இந்த மரங்களைக் காணமுடிந்தது. பொதுவாக ஆற்றுப்படுகைகள், கிராம குளங்கள், ஒத்தையடி பாதைகள், வயல்வெளிகளின் வரப்புகள் ஒட்டி இம்மரங்கள் அதிகம் வளர்ந்தது. வெகு தொலைவில் உள்ள நிலத்தடி நீரை ஈர்க்கக்கூடிய சக்தி இதற்கு உண்டு. இதன் வேர்கள் மண் அரிப்பைத்தடுத்து நீர்வழித்தடத்தை பாதுகாப்பதால்தான் இம்மரங்களை பெரும்பாலும் ஆற்றுப்படுகையை ஒட்டி அதிகளவில் நட்டு வைத்தனர்.

செங்கல் சூளைகளில் பனை மரத்தை வெட்டி அதன் விறகை கொண்டு எரித்தால் செங்கற்களின் நிறம் சிவப்பாக ஜொலிக்கும் என்பதால் அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டது. தமிழரின் வாழ்வில் ஓர் அங்கமாக விளங்கிய பனைமரங்கள் தற்போது அழியும் நிலையை எட்டியிருக்கின்றன. பனைமரத்தின் பச்சைக் குருத்து உடலுக்கு சத்தானது. பனைஓலைகள் கடும் வறட்சிக் காலங்களில் கால்நடைகளுக்குத் தீவனமாக வழங்கப்பட்டுள்ளது. பனை ஓலை விசிறிகளில் வீசும் போது குளுமையான காற்று கிடைக்கும். பனங்கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருந்தது என பனைமரத்தின் பயன்பாட்டை சித்த மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தண்ணீர் இல்லாமலேயே வளரும் தன்மையுடைய பனைமரத்தை காடு, தோட்டம் என வித்தியாசம் இல்லாமல் வயல் ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வளர்த்து வந்தனர்.

சென்னை மாநகராட்சியின் மனித நேய மேயரைப் பற்றி பார்த்து வரும் பகுதியிலே ஏன் பனை மரங்களின் புகழ் பாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா?

தமிழகத்தின் பற்பல கிராமங்களிலேயே பனை மரங்கள் அழிந்துகொண்டிருக்கும் வேளையில்... மாநகராம் சென்னையைப் பற்றி கேட்க வேண்டாம். ஆனால் சென்னை மாநகர மேயராக மனித நேயர் பொறுப்பு வகித்த காலத்தில்... பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பயன்களை உடைய பனை மரங்களை அதிக அளவில் நட வேண்டும் என்று உத்தரவிட்டு அதை செயல்படுத்தியும் காட்டியவர்தான் மனித நேயர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பனை மரங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்துவிட்டன. சென்னை ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் பகுதியில் மட்டுமே ஒரு சில பனை மரங்கள் கண்களில் தென்படுகின்றன. அடையாறு, கூவம் போன்ற நதிக்கரைகளில் இருந்த எண்ணற்ற பனைமரங்கள் வேட்டையாடப்பட்டுவிட்டன.

இந்நிலையில் சென்னையின் எதிர்காலத்துக்கு பனை மரங்கள் என்று அவசியம் என்று ஒரு சுற்றுச் சூழல் ஆர்வலராகவும், சென்னை மேயராகவும் யோசித்த சைதை துரைசாமி, சென்னை மாநகராட்சிப் பூங்கா துறை மூலம் சென்னைப் பட்டணம் முழுதும் பனை மரங்கள் நடவேண்டும் என்ற திட்டத்தை தீவிரப்படுத்தினார். மேயரது பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள்தான். ஆனால் இந்த பனை மர விதைப்பு என்ற ஒற்றைச் செயலால் மட்டுமே மனித நேயரின் புகழ் பல்லாண்டு பல்லாண்டு நிலைத்திருக்கும்.

இதை எப்படி செயல்படுத்தினார்? பார்ப்போம்.

விளம்பர பகுதி

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon