மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

பட்டம் வென்ற சிறுமி!

பட்டம் வென்ற சிறுமி!

தேசிய அளவிலான பென்ஸ்டா சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று (அக்டோபர் 7) நடைபெற்ற இறுதிப் போட்டியில் தல்விந்தர் சிங் மற்றும் மகக் ஜெயின் சாம்பியன் பட்டம் வென்றனர்.

பென்ஸ்டா ஓப்பன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் தல்விந்தர் சிங், சுராஜ் பிரபோத்தை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தல்விந்தர் சிங் வெற்றி பெற்றார். இதன்மூலம் பென்ஸ்டா சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லும் பஞ்சாப்பைச் சேர்ந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் பஞ்சாப் வீரரான சுனில் குமார், 2005ஆம் ஆண்டு பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 16 வயதான சிறுமி மகக் ஜெயின், 18 வயதான ஜீல் தேசாயை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 7-5, 6-3 என மகக் ஜெயின் வெற்றி பெற்று, பட்டத்தை வென்றார். இதில் மகக் ஜெயின் பத்தாம் வகுப்பு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இந்த ஜோடி நான்கு முறை மோதியுள்ளன. அதில் ஜீல் தேசாய் மூன்று முறை வென்றுள்ளார்.

வெற்றி குறித்து மகக் ஜெயின் கூறுகையில், “இந்த வெற்றி மிகவும் விஷேசமானது. இதை நான் மிகப் பெரிய வெற்றியாகக் கருதுகிறேன். இதன் மூலம் நான் இன்னும் பலமாக மாறியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது