மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

தலைவாழை இலை - ஹெல்த் ஹேமா 08

தலைவாழை இலை  -  ஹெல்த் ஹேமா 08

தலைவாழை இலை போட்டு உணவு பரிமாறுவது நம் வழக்கம். இதில் பல மருத்துவக் குணங்கள் உண்டென்பதை நம் முன்னோர்கள் என்றோ சொல்லி வைத்துள்ளனர். ஆனால், இன்று பிளாஸ்டிக் இலைகளும், காகித இலைகளும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இருப்பினும் வாழை இலையில் சாப்பிடுவதால் என்னன்ன நன்மைகள் என தெரிந்துகொள்ளாமலேயே பயன்படுத்தி வருகின்றனர். நாமும் தெரிந்து கொண்டால், பிறருக்கும் தெரியப்படுத்தினால் வாழையடி வாழையாக நம் வம்சம் தழைக்கும்.

குறிப்பு: வம்சம் என்பது சீரியலை அல்ல…

வாழை இலையில் சாப்பிடுவதால், இள நரை வராமல் நீண்ட நாள்கள் தலைமுடி கறுப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினி. உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் வல்லமை கொண்டது.

நெருப்பில் காயம்பட்டவர்களை வாழை இலையில் கிடத்துவதை பார்த்திருப்போம். வாழை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் அற்புதமான கிருமி நாசினி.

கிராமங்களில் பாம்பு கடித்துவிட்டால் முதலில் வாழைச்சாறு பருகக் கொடுப்பார்கள். விஷத் தன்மை இறங்க ஆரம்பிக்கும்.

கல்யாண வீடுகளில் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தவர்கள் நமது தமிழர்கள்.

வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் அண்டுவதே இல்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல்நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். பித்தமும் தணியும். நரம்புகள் பலப்படும்.

தாம்பத்ய உணர்வைத் தூண்டும். கல்யாணமான தம்பதியருக்கு மதியம், இரவு என இரு வேளை விருந்தும் வாழை இலையில் தான் படைப்பார்கள்.

தவிர வயிற்று புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழை இலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

ஹெல்த் ஹேமா 01

ஹெல்த் ஹேமா 02

ஹெல்த் ஹேமா 03

ஹெல்த் ஹேமா 04

ஹெல்த் ஹேமா 05

ஹெல்த் ஹேமா 06

ஹெல்த் ஹேமா 07

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon