மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

நோ வெட்டிங் கட்டிங்!

நோ வெட்டிங் கட்டிங்!

அஞ்சலி நடிப்பைப் பார்த்து வருடங்கள் ஓடிவிட்டன. கடைசியாக இறைவி திரைப்படத்தில் பார்த்தது, அதன்பிறகு தரமணி படத்தில் எக்ஸ்ட்ரா லார்ஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இனி எப்போது அஞ்சலி திரையில் தோன்றுவார் என்ற கேள்விக்குப் பதிலாகக் காத்திருக்கிறது பலூன் திரைப்படம்.

ஜெய் - அஞ்சலி ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கையை மீறி இது ஜெய்க்கு மிக முக்கியமான படம். அதேசமயம் அஞ்சலியின் கேரக்டரும் சாதாரணமானதல்ல. இப்படி எடுக்கப்பட்டிருக்கும் ஒரு படத்தில் மிகவும் ஸ்டிராங்கான கேரக்டரில் அஞ்சலி வரும் காட்சிகளை எடுக்கச் சொன்னால் சம்மதிக்க முடியுமா?

இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு காட்சியும் திரைக்கதையுடன் பல இடங்களில் பிணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, எந்தக் காட்சியையும் நீக்க முடியாது என்று சொல்லி அப்படியே எடுத்த படத்துக்கு யு/ஏ சர்டிஃபிகேட் வாங்கியிருக்கிறோம். அஞ்சலி வரும் காட்சிகள் படத்தின் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என்பதால் சமரசம் செய்யவில்லை என இயக்குநர் சினிஷ் தெரிவித்திருக்கிறார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon