மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

வரிக் குறைப்பு: ஜவுளித்துறை வரவேற்பு!

வரிக் குறைப்பு: ஜவுளித்துறை வரவேற்பு!

கையால் நூற்கப்படும் நூலுக்கான வரி 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதற்குத் தென்னிந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) கவுன்சிலின் 22ஆவது கூட்டம் டெல்லியில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில் பல்வேறு பொருள்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதனுடன் ஜவுளித்துறையில் கையால் நூற்கப்படும் நூலுக்கான வரி தற்போதுள்ள 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இது கைத்தறியாளர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நெசவாளர்களுக்கான உற்பத்திச் செலவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தென்னிந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பின் தலைவரான பி.நடராஜன் கூறுகையில், “முன்பு கையால் நூற்கப்படும் நூலுக்கான வரி 18 சதவிகிதமாகவும் நெய்யப்பட்ட துணிகளுக்கான வரி 5 சதவிகிதமாகவும் இருந்தது. மேலும், உள்ளீட்டு வரிக் கடனுக்கான தொகையைத் திரும்பப் பெற இயலாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. இதனால் செயற்கை நூலிழைப் பொருள்களுக்கான உற்பத்தி வரிப் பிரச்னைகளை ஜவுளித்துறையினர் சந்தித்து வந்தனர். எனவே ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் வரிக் குறைப்பு குறித்து தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து தற்போது கையால் நூற்கப்படும் நூலுக்கான வரி 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon